மொத்தம் 10 அணிகள் பங்கேற்று நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கிய லக்னோ அணியானது புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தினை பிடித்து வெளியேறியுள்ளது. இந்த ஆண்டு ரிஷப் பண்ட் தலைமையில் புதிய அணியாக களமிறங்கிய லக்னோ அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
லக்னோ அணி வாங்கிய சிறப்பான வீரர் : ஆகாஷ் சோப்ரா
ஆனால் இந்த ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகள் என 12 புள்ளிகளை மட்டுமே எடுத்து ஏழாம் இடத்தை பிடித்து வெளியேறியுள்ளது. இந்த தொடர் முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்டின் ஆட்டம் சரிவர அமையாதது அந்த அணியின் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக மாறியது.
கடைசியாக நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தது தவிர ரிஷப் பண்ட் பெரியளவில் இந்த தொடரில் சோபிக்கவில்லை. அதேவேளையில் லக்னோ அணியின் துவக்க வீரர்களாக விளையாடிய எய்டன் மார்க்கம் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோரது ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது.
அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக பந்து வீசாமல் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடிய வேளையில் அவரது ஆட்டம் அசத்தலாக இருந்தது. இந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் கிட்டத்தட்ட 50 ரன்கள் சராசரியுடன் 627 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு லக்னோ அணிக்காக 616 ரன்கள் அடித்திருந்த கே.எல் ராகுலை தாண்டி அவர் ஒரு சீசனில் லக்னோ அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் மிட்சல் மார்ஷின் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : லக்னோ அணி இந்த ஆண்டு தேர்வு செய்த வீரர்களில் மிக மதிப்பு மிக்க வீரராக மிட்சல் மார்ஷ் திகழ்கிறார். இந்த தொடரிலேயே குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட மிக மதிப்பு வாய்ந்த வீரர் என்று அவரை கூறுவேன்.
இதையும் படிங்க : லக்னோ அணியை வீழ்த்திய கையோடு தல தோனியின் சாதனையை முறியடித்த ஜிதேஷ் சர்மா – விவரம் இதோ
ஏனெனில் 3 கோடி 50 லட்சம் ரூபாய் என்கிற விலைக்கு வாங்கப்பட்ட அவர் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதிக கோடிகளை சம்பளமாக பெற்ற வீரர்களே இவ்வளவு ரன்கள் அடிக்காத வேளையில் இவர் 600 ரன்களை கடந்துள்ளது நிச்சயம் மிகச்சிறப்பான ஆட்டம் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



