இந்திய அணியில் பும்ராவை சிறந்த பாஸ்ட் பவுலர் இவர்தான் – அஜித் அகார்கர் கருத்து (அந்த பவுலர் யார் தெரியுமா ?)

Agarkar-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

INDvsNZ

- Advertisement -

அந்த வகையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் இந்திய அணியில் பும்ராவை விட சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருக்கிறார் என்று தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா வேகமாக வளர்ந்து வந்தாலும் என்னை பொறுத்தவரை முகமது ஷமி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர்.

ஏனெனில் உலகில் எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும் அந்த மைதானத்தில் விக்கெட்டுக்கு கூடிய திறமை படைத்த ஒரே பவுலர் முகமது ஷமி மட்டும்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து அவர் பேசுகையில் : என்னை பொருத்தவரை இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் இந்த இறுதி போட்டியில் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார். ஏனெனில் கடந்த முறை இங்கிலாந்து அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி இருப்பதால் நிச்சயம் அந்த சூழ்நிலை விராட் கோலிக்கு கைகொடுக்கும் என்றும் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Shami

இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் தங்கி குவாரன்டைனில் இருந்து இருக்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement