இவங்க 2 பேரோட மோசமான ஆட்டம் இந்திய அணிக்கு தான் கஷ்டமா இருக்கப்போகுது – அஜித் அகார்க்கர் பேட்டி

Agarkar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுகிறார்கள் ? என்பதை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் பலர் இந்த ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகின்றனர். அதேவேளையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வீரர்கள் சிலர் சிறப்பாக விளையாடி வருவதையும் நாம் இந்த ஐபிஎல் தொடரில் பார்க்க முடிகிறது.

IND

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இரு வீரர்களின் மோசமான ஆட்டம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் கவலை தெரிவித்துள்ளார். அதன்படி மும்பை அணியை சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிக மோசமான ஆட்டத்தை இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் அளித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக முக்கியமான வீரராக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள சூர்யகுமார் யாதவ் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரவி பிஷ்னாய் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதுவரை இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 16 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதேபோன்று இஷான் கிஷன் சரிவர விளையாடாததால் அவர் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் வெளியில் அமரவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அஜித் அகர்கர் கூறுகையில் : சூர்யகுமார் யாதவ் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடிய விதம் சுத்தமாக நன்றாக இல்லை. சில பந்துகளை அவர் களத்தில் நின்று சந்தித்து பின்னர் அடிக்க ஆரம்பித்தால் நல்ல முமென்டம் கிடைக்கும். சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது ஆட்டம் இந்திய அணிக்கு தற்போது பெரும் கவலை தரும் விதமாக மாறியுள்ளது.

- Advertisement -

bishnoi

ஏனெனில் ஒரு பேட்ஸ்மென் சில பந்துகளை சந்தித்த பின்னர் நல்ல ரிதத்திற்கு சென்றால் அடிக்க முடியும். அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். இதனால் அவருடைய நம்பிக்கையையும் அவர் இழக்க நேரிடும் இது இந்திய அணிக்கு தான் பெரிய பிரச்சினையாக முடியும். அதே வேளையில் உலக கோப்பை அருகில் வரும் இவ்வேளையில் இஷான் கிஷன் வெளியே அமர வைக்கப்பட்டு உள்ளது அவரது மன உறுதியை சற்று பாதிக்கும்.

இதையும் படிங்க : எங்கள் அணியின் தொடர் தோல்விகளுக்கு இதுவே காரணம் – வருத்தத்துடன் பேசிய கே.எல் ராகுல்

எனவே அவர்கள் இருவரும் எஞ்சியுள்ள போட்டிகளில் மீண்டும் நம்பிக்கையை பெற்று சிறப்பாக விளையாடினால் தான் இந்திய அணிக்கு நல்லது. உலகக்கோப்பை அருகில் வரும் வேளையில் வீரர்கள் பாசிட்டிவ் எண்ணத்தோடு இருக்க வேண்டும் என அகர்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement