பஞ்சாப் அணியில் இவரை ஏன் இன்னும் வச்சிருக்கீங்க. அவரை மொதல்ல தூக்குங்க – அஜித் அகார்க்கர் கருத்து

Agarkar
- Advertisement -

ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 16 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இன்று நடைபெறு இருக்கும் 17 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இப்போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர். அதில் அவர் கூறியதாவது

srh vs pbks

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணி ஏன் என்னும் கிறிஸ் கெயிலை அணியில் வைத்துள்ளது என்று எனக்கு தெரியவில்லை. அவரை அணியில் இருந்து தூக்கிவிட்டு உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேனான டேவிட் மலானை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், கிறிஸ் கெயிலை வெளியில் அமர வைப்பது என்பது ஒரு கடினமான முடிவுதான் என்றாலும், அணியின் நலனுக்காக இந்த முடிவை பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்துதான் ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

42 வயதாகும் கிறிஸ் கெயில் இந்த ஐபிஎல்லின் தொடக்க ஆட்டத்தில் 40 ரன்கள் அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அவர் அடித்த ரன்கள் 10, 11, 15 மட்டுமே. இந்த ஐபிஎல்லில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில் மொத்தம் 76 ரன்களே அடித்துள்ளார். சராசரியும் வெறும் 19 மட்டுமே.

Gayle

ஏற்கனவே கிறிஸ் கெயிலை வெளியில் அமரவைத்துவிட்டு வேறு ஒரு வீரரை களமிறக்குங்கள் என்று அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அஜித் அகர்கரின் இந்த கருத்தும் ரசிகர்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கிறது.

gayle 1

தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிறகு விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமென்றால், சில கடினமான முடிவுகளை எடுத்தேயாக வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளது.

Advertisement