- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கு இவர் இல்லாம பிளைட் ஏறாதீங்க – அஜித் அகார்கர் வேண்டுகோள்

ஆஸ்திரேலியா மண்ணில் இன்னும் சில மாதங்களில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற வேண்டி தற்போது முழு வீச்சில் இந்திய அணி வீரர்களை தயார் செய்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறிய வேளையில் இம்முறை கோப்பையை விடக்கூடாது என்கிற எண்ணத்தில் பலமான அணியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வரும் இவ்வேளையில் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலிய செல்லக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகார்கர் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்த விராட் கோலி அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் திணறி வருவதால் அவரது பேட்டிங் ஃபார்ம் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதோடு நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரிலும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் அவர் இடம் பெறவில்லை. இதன் காரணமாக எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் இடம் பெறுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் நிச்சயம் விராட் கோலி போன்ற வீரர் உலககோப்பை அணிக்கு தேவை என அஜித் அகார்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி தன்னுடைய பார்மை மீட்டெடுத்து விட்டால் நிச்சயம் அவர் ஒரு அபாயகரமான வீரராக மாறுவார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த வீரராக பார்க்கப்படும் விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் அளவிற்கு தகுதியாக இருக்கிறார். அதோடு இழந்த தனது பார்மை அவர் நிச்சயம் மீட்டெடுக்கும் பட்சத்தில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக செயல்படுவார்.

அதே போன்று ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக விளையாடும் அவரது அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் உதவும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி ஒரு திறமையான வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாகவே அவர் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பினை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இவரோட இடம் இப்போ ரொம்ப டேஞ்சரான பொசிஷன்ல இருக்கு – அகார்கர் ஓபன்டாக்

நிச்சயம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியுடன் அவர் சென்று இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தன்னை நிரூபிப்பார் என்றும் அவர் இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பிளைட் ஏறக்கூடாது என அஜித் அகார்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by