தோனி செய்யும் இந்த தவறை மாற்றிக்கொண்டால் மட்டுமே சி.எஸ்.கே ஜெயிக்கும் – நேரடியாக கூறிய அகார்கர்

Agarkar

இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்தே சென்னை அணிக்கு மிக மோசமான தொடராக அமைந்து வருகிறது. வழக்கமாக அனைத்து தொடரிலும் புள்ளிப் பட்டியலின் முதல் இரு இடங்களை ஆக்கிரமித்திருக்கும் சிஎஸ்கே அணி இம்முறை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடர் தோல்விகளால் சி.எஸ்.கே அணி எப்பொழுதும் இல்லாத வகையில் விமர்சனத்திற்க்கு உள்ளாகியுள்ளது.

CSK-1

இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 தோல்விகளை அடைந்துள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி குறித்தும் தோனி குறித்தும் பல்வேறு கிரிக்கெட் முன்னாள் வீரர்களும், விமர்சகர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை தோனி ஐந்தாவது பேட்ஸ்மேனுக்கு கீழ் இறங்கி விளையாட கூடாது. ஏனெனில் ஆட்டத்தில் தன்மைக்கு ஏற்ப தோனியால் பேட்டிங் பொசிஷனை மாற்றி விளையாட முடியும்.

இருப்பினும் ஐந்தாவது ஆர்டருக்கு கீழ் இறங்கும் போது அவரது ஆட்டம் வீணாகிறது. கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த அனுபவ வீரரான தோனி சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் விளையாடுவதில் வல்லவர். அதனால் அவர் முன் கூட்டியே களமிறங்க வேண்டும் அப்படி செய்தால் அவரது பார்ம் அடுத்தடுத்த ஆட்டங்களில் அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

dhoni 1

தோனி பின்வரிசையில் விளையாடக்கூடாது என்றும் முன்கூட்டியே விளையாடினாலே அவரால் சாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை நாளை (23/10/2019) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.