- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இலங்கை தொடரில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் கழற்றி விடப்பட்டது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்

ஜூலை மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இருப்பினும் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை பரிந்துரைத்துள்ளார். அதை ஏற்றுள்ள தேர்வுக்குழு ஹர்திக் பாண்டியாவை மொத்தமாக கழற்றி விட்டதுடன் சுப்மன் கில்லை துணை கேப்டனாக அறிவித்தது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அபிஷேக் ஷர்மாவுக்கு கேப்டனாக தம்முடைய ஓப்பனிங் இடத்தை கொடுக்காத அவர் சுயநலத்துடன் நடந்து கொண்டார்.

- Advertisement -

அகர்கர் விளக்கம்:
அத்துடன் ஜெய்ஸ்வாலை சதத்தை தொடவிடாத அவர் தம்முடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். ஆனால் அப்படி சுயநலத்துடன் நடந்து கொண்ட அவரை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு அதே தொடரில் அசத்தலாக விளையாடிய அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இலங்கை தொடரில் பெஞ்சில் அமரும் பெஞ்சில் அமரும் வாய்ப்பை கூட கொடுக்கவில்லை.

குறிப்பாக சுப்மன் கில்லை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார். அத்துடன் தோனியின் நம்பிக்கையை பெற்ற ருதுராஜ் தலைமையில் ஏற்கனவே இந்தியா 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றது. அது ஒருபுறமிருக்க தனது கடைசி போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சனுக்கும் இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் 15 பேரை மட்டுமே தேர்வு செய்யக்கூடிய அணியில் ருதுராஜ், ரிங்கு, சாம்சன் ஆகியோரை இடமில்லாததால் தேர்வு செய்யவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் சிலர் தவற விடுவார்கள். நீங்கள் அவர்களுக்கு பதிலாக யார் தேர்வாகியுள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை தேர்வானவர்கள் தகுதியானவர்களாக இல்லையென்றால் நாங்கள் விளக்கம் கொடுப்போம்”

இதையும் படிங்க: விராட் கோலி, ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? பயிற்சியாளர் கம்பீர் வெளியிட்ட அறிவிப்பு

“எடுத்துக்காட்டாக டி20 உலகக் கோப்பையில் தேர்வாகாதது ரிங்குவின் தவறில்லை. 15 பேர் கொண்ட அணியில் அனைவரையும் தேர்ந்தெடுப்பது கடினம். முக்கிய வீரரான ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து வந்ததால் அவரை நாங்கள் அதிகமாக விளையாட விரும்புகிறோம். கேஎல் ராகுல் உலகக்கோப்பை நன்றாக விளையாடினார். ஆனால் அவரைப் போலவே சஞ்சு சாம்சனும் உள்ளார். எனவே தேர்வான வீரர்கள் தொடர்ந்து அசத்துகின்றனர். ஒருவேளை அவர்கள் அசத்தத் தவறினால் காத்திருக்கும் சஞ்சு சாம்சன் போன்றவரை நாங்கள் தேர்ந்தெடுப்போம்” என்று கூறினார்.

- Advertisement -