- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அபிமன்யு ஈஸ்வரனை நம்ப வைத்து கழற்றி விட்டது ஏன்? கம்பீரை விளாசும் ரசிகர்கள்.. அகர்கர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக அத்தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான அந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன் கழற்றி விடப்பட்டுள்ளது நிறைய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

ஏனெனில் உள்ளூரில் ஓரளவு சிறப்பாக விளையாடிய அவர் 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடத் தேர்வானார். இருப்பினும் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பைப் பெறாத ஈஸ்வரன் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முழுவதும் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் அவர் 5 போட்டிகளில் முழுமையாக பெஞ்சில் மட்டுமே அமர்ந்திருந்தார்.

- Advertisement -

நம்ப வைத்து ஏமாற்றம்:

அது பற்றி கேட்டதற்கு வருங்கால தொடர்களில் ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று இங்கிலாந்து தொடரின் முடிவில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அத்துடன் வருங்காலத்தில் வாய்ப்பு கொடுப்பேன் என்று தம்முடைய மகனிடம் கௌதம் கம்பீர் சொன்னதாக கடந்த மாதம் ஆகஸ்டு 8ஆம் தேதி கொடுத்த பேட்டியில் அபிமன்யு ஈஸ்வரன் தந்தை ரங்கநாதன் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலிருந்து முற்றிலுமாக ஈஸ்வரன் கழற்றி விடப்பட்டுள்ளார்.

அதனால் பெஞ்சில் அமரும் வாய்ப்பைக் கூட பெறாத ஈஸ்வரனை நம்ப வைத்து கழற்றி விட்ட கௌதம் கம்பீரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இது பற்றி செய்தியாளர்களும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் வெளிப்படையாக கேட்டனர். அதற்கு தற்சமயத்தில் 3வது ஓப்பனிங் பேட்ஸ்மேன் தேவையில்லாததாலேயே ஈஸ்வரனை கழற்றி விட்டதாக அவர் பதிலளித்தார்.

- Advertisement -

அகர்கர் விளக்கம்:

இது பற்றி அகர்கர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக நீங்கள் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது 16 அல்லது 17 வீரர்களை தேர்ந்தெடுப்பீர்கள். அங்கே ஏதேனும் காயம் அல்லது தவறாக நடக்கும் பட்சத்தில், ஒருவரை நீங்கள் அனுப்பி வைத்து விளையாட வைக்கலாம். இங்கே உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஸ்பின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் இருக்கிறார்”

இதையும் படிங்க: ஆஸியில் வரலாற்று சாதனை பெயருடன் கால்தடம் பதித்த அஸ்வின்.. வார்னர் தலைமையில் ஆட உள்ளது பற்றி பேட்டி

“இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அக்சர் படேல் இல்லை. ஆனால் இங்கே உங்களால் 15 பேர் கொண்ட அணியை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். எனவே ஈஸ்வரன் கதையில் எதுவுமில்லை. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், ஜெய்ஸ்வால் மோசமாக விளையாடவில்லை. தற்சமயத்தில் எங்களுடைய அணியில் 3வது ஓப்பனிங் வீரருக்கு அவசியமில்லை. ஒருவேளை தேவைப்பட்டால் ஈஸ்வரனை நாங்கள் தேர்ந்தெடுப்போம்” என்று கூறினார்.

- Advertisement -