
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் செப்டம்பர் 28-ஆம் தேதியுடன் அந்த தொடரானது நிறைவு பெறுகிறது. அதன்பின்னர் நாடு திரும்பும் இந்திய அணியானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியானது இன்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் சுப்மன் கில் தலைமையில் 15 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றிருந்த பெரும்பாலானோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ள வேளையில் ஒரு சில மாற்றங்கள் அணியின் பேலன்ஸ்க்கு ஏற்றார் போல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் புதிய டெஸ்ட் துணை கேப்டனாக அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் யாதெனில் : ரிஷப் பண்ட் இங்கிலாந்து தொடரின் போது காயம் ஏற்பட்டு வெளியேறியதால் அவரால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு இந்த புதிய கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து கேள்விக்கு தெளிவான பதிலை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
ரிஷப் பண்டிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் விளையாட முடியாமல் போனது. எனவே அவருக்கு அடுத்து இந்திய அணியில் நல்ல அனுபவம் கொண்ட வீரர் யார் என்று பார்க்கையில் ரவீந்திர ஜடேஜா ஏகப்பட்ட அனுபவத்துடன் அணியில் இருக்கிறார். அதனால் தான் அவரை துணை கேப்டனாக நியமித்துளோம்.
இதையும் படிங்க : மோகன்லால் மாதிரி நான் இந்திய அணியின் ஜோக்கர், வில்லனா இருந்தாகனும்.. சாம்சன் உருக்கமான பேட்டி
ரிஷப் பண்ட் தற்போதைக்கு இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியாது என்பதனாலே ரவீந்திர ஜடேஜாவை புதிய துணை கேப்டனாக நியமித்துள்ளோம். அடுத்த தென்னாப்பிரிக்க தொடருக்குள் ரிஷப் பன்ட் நிச்சயம் அணிக்கு திரும்பிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.