
இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சில ஆண்டுகளாகவே மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பெற்று விளையாடி வந்தார். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய அவர் அதன் பின்னர் இந்திய அணியின் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.
ஏனெனில் இங்கிலாந்து தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய அவரை ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விளையாடுமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டது. ஆனால் பி.சி.சி.ஐ-யின் அந்த வேண்டுகோளை ஏற்காமல் ஓய்வில் இருந்தத அவரின் மீது அதிருப்தி அடைந்த பிசிசிஐ அவரை வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது.
அதுமட்டுமின்றி டி20 உலக கோப்பை அணியிலும் புறக்கணித்தது. அதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான கொல்கத்தா அணி வென்றதால் மீண்டும் அவருக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடிக்க வேண்டுமெனில் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரிலும் அவர் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
எனவே இனி அவரை டெஸ்ட் அணியில் கொண்டுவரக்கூடாது என்று தேர்வுக்குழு தலைவர் அகார்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் இடம் கிடைக்காத வேளையில் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டாலாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : முதல் டெஸ்டில் வாய்ப்பை கொடுத்த வங்கதேசம்.. ஆஸி தொடருக்காக ரோஹித் மாற்றம்.. இந்திய பிளேயிங் லெவன்
இவ்வேளையில் துலீப் டிராபி தொடரில் அவர் சொதப்பி உள்ளதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் காரணமாக அவரது டெஸ்ட் கரியர் முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம். இருப்பினும் ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து இடம்பெற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.