IND vs WI : கொஞ்சமும் சம்மந்தமில்லாத கேப்டன்ஷிப் – வெற்றிக்கு பின் ஷிகர் தவானை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்

Yuzvendra-Chahal
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜூலை 24இல் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்ற காரணத்தால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 311/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கடைசி வரை இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட தொடக்க வீரர் ஷாய் ஹோப் 115 (135) ரன்களும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 (77) ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Axar Patel

- Advertisement -

அதை தொடர்ந்து 312 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 13 (31) சூர்யகுமார் யாதவ் 9 (8) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 43 (49) ரன்களும் மிடில் ஆர்டரில் ஷ்ரேயஸ் ஐயர் 63 (71) ரன்களும் சஞ்சு சாம்சன் 54 (51) ரன்களும் எடுத்து வெற்றிக்காக போராடி அவுட்டானார்கள். அதனால் இறுதியில் தீபக் ஹூடா எடுத்த 33 (36) ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 5 சிக்ஸர்களை பறக்க விட்ட அக்சர் படேல் 64* (35) ரன்கள் குவித்து அபார பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தார்.

சுமாரான பவுலிங்:
அதனால் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியா வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணில் சாய்த்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களின் சாமர்த்தியத்தால் பெரிய ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த இந்தியா பந்துவீச்சில் சுமாராகவே செயல்பட்டது. குறிப்பாக சிராஜ் மற்றும் ஹூடா ஆகியோரைத் தவிர தாகூர் 3 விக்கெட்டுகளை எடுத்தாலும் அவர் உட்பட எஞ்சிய அனைத்து பவுலர்களும் பெரிய அளவில் ரன்களை வாரி வழங்கினார்.

Dhawan-1

போதாக்குறைக்கு ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று சமீபத்திய இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் முதன்மையான சுழல் பந்துவீச்சாளர் சஹாலை முன்கூட்டியே பந்துவீச அழைக்காத கேப்டன் ஷிகர் தவான் 17-வது ஓவரில் தான் அழைத்தார். அதற்கு முன்பாக பகுதி நேர பந்து வீச்சாளரான தீபக் ஹூடாவையும் அக்சர் பட்டேலையும் பயன்படுத்தினார். அதனால் கடைசி கட்ட ஓவர்களில் பந்துவீசிய அவரை எதிரணி வீரர்கள் அதிரடியாக அடித்ததால் இறுதியில் அவருக்கு 10 ஓவர்கள் முழுமையாக ஷிகர் தவான் கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

சம்மந்தமில்லா கேப்டன்ஷிப்:
ஆச்சர்யப்படும் வகையில் முதல் போட்டியிலும் அதே 17-வது ஓவரில் தான் சஹால் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆனால் நல்ல பார்மில் இருக்கும் முதன்மை பந்து வீச்சாளர் சஹாலை முன்கூட்டியே பந்துவீச அழைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் முன்னாள் தமிழக வீரர் முரளி கார்த்திக் எதன் அடிப்படையில் ஷிகர் தவான் தொடர்ச்சியாக இந்த மாதிரியான கேப்டன்ஷிப் செய்கிறார் என்று புரியவில்லை என விமர்சித்துள்ளார். இதுபற்றி போட்டி முடிந்த பின் வர்ணனையாளராக செயல்படும் அவர் பேசியது பின்வருமாறு.

murali 1

“மிடில் ஓவர்களில் விக்கெட்டுக்களை எடுப்பது முக்கியமாகும். அதை எடுப்பதற்கு உங்களிடம் நல்ல பவுலர் இருக்கும்போது எதற்காக டி20 கிரிக்கெட் போல கடைசி வரை காத்திருக்க வேண்டும். தீபக் ஹூடா பந்து வீசியதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்தான் உங்களது முதன்மை சுழல்பந்து வீச்சாளரா? எதற்காக சாஹலை காக்க வைக்கிறீர்கள். மிடில் ஓவர்கள் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் பிரச்சினையாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும். ஏனெனில் அந்த சமயங்களில் ஆட்டம் வளைந்து நெளிந்து கொண்டே இருக்கிறது. அப்போது விக்கெட் எடுக்க சஹால் போன்ற ஆயுதம் இருக்கும்போது நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

இதே அம்சத்தை பற்றி மற்றொரு முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி பேசியது பின்வருமாறு. “சஹாலை எதற்கு பிடித்து வைத்திருந்தார்கள் என்ற திட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் பந்து வீசும் போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒருவேளை எதிரணியில் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்ய கூடியவர்கள் இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்த அந்த முடிவு எடுக்கப்பட்டதா? அப்படியானால் அது பேராசையாகும்”

agarkar

“ஏனெனில் கடைசி கட்ட ஓவர்களில் எந்த பவுலர் வீசுகிறார் என்பது முக்கியமல்ல. எதிர்ப்புறம் பேட்ஸ்மேன்கள் செட்டிலாகி இருந்தால் நிச்சயமாக அதிரடியாக அடிப்பார்கள். எனவே ஏன் அவரை முன்கூட்டியே பந்துவீச்சு அழைத்து விக்கெட்டுகளை எடுக்கக் கூடாது” என்று கூறினார்.

Advertisement