IPL 2023 : தனது மொத்த கேரியரில் செய்யாததை சிஎஸ்கே அணியில் அசால்டாக 2 முறை செய்த ரகானே – 7 வருடங்கள் கழித்து மாஸ் கம்பேக்

Ajinkya Rahane MoM
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணிக்கு இந்த சீசனில் சிறப்பாக விளையாடும் நிறைய வீரர்களுக்கு மத்தியில் அஜிங்க்ய ரகானே யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த அவர் கடந்த 2011 முதல் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி 2015 உலக கோப்பையில் முக்கிய வீரராக விளையாடினார்.

ஆனால் அதன் பின் சற்று மெதுவாக விளையாடிய காரணத்தால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான இடத்தைப் பிடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலி நாடு திரும்பியதும் இந்தியாவை அபாரமாக வழி நடத்திய அவர் 2 – 1 (4) என்ற கணக்கில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று கொடுத்தது யாராலும் மறக்க முடியாது. அதே போல ஐபிஎல் தொடரிலும் 2008 முதலே மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா போன்ற நிறைய அணிகளில் விளையாடிய அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

- Advertisement -

மாஸ் கம்பேக்:
ஆனால் அந்த அணிகளில் விளையாடியதை விட இந்த சீசனில் சென்னை அணிக்காக வெறும் 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே பிறந்து வளர்ந்த மும்பைக்கு எதிராக வெறும் 19 பந்துகளில் அதிவேகமாக அரை சதமடித்த சிஎஸ்கே பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். அந்த வகையில் 61 (27), 31 (19), 37 (20), 9 (10) என முதல் 4 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் 35 (20), கான்வே 56 (40), துபே 50 (21) என இதர பேட்ஸ்மேன்களை விட 6 பவுண்டரி 5 சிக்சருடன் 71* (29) ரன்களை 244.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோர் (235/4) பதிவு செய்த அணியாக சென்னை சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக பொதுவாகவே கிளாஸ் நிறைந்த மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய அவர் இந்த போட்டியில் பின்பக்க திசைகளில் திரும்பி வித்தியாசமான ஷாட்களை அடித்தது யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. அதை தொடர்ந்து 236 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு ஜேசன் 61 (26) ரன்களும் ரிங்கு சிங் 53* (32) ரன்களும் எடுத்தது தவிர்த்து ஏனைய வீரர்கள் குறைவான ரன்களை எடுத்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 71* ரன்கள் குவித்த ரகானே ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

இதற்கு முன் 12 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற ரகானே தற்போது 13வது ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். குறிப்பாக கடைசியாக கடந்த 2016இல் ஆட்டநாயகன் வென்றிருந்த அவர் தற்போது 7 வருடங்கள் கழித்து சென்னை அணியில் ஆட்டநாயகன் விருது வென்று அபாரமான கம்பேக் கொடுத்துள்ளார். அதை விட 2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரகானே இதுவரை 153 இன்னிங்ஸில் 4283 ரன்களை 123.04 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

இருப்பினும் 2022 வரை கடந்த 15 வருடங்களில் பல்வேறு அணிகளுக்காக விளையாடிய அவர் தனது கேரியரில் ஒருமுறை கூட ஒரு போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடித்ததில்லை. ஆனால் இந்த சீசனில் இதுவரை சென்னைக்காக விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியுள்ளார். அந்த பட்டியல்:
1. 61 (27) : 225.92, மும்பைக்கு எதிராக, 2023*
2. 71* (29) : 244.83, கொல்கத்தாவுக்கு எதிராக, 2023*

- Advertisement -

அத்துடன் இந்த சீசனில் குறைந்த பந்துக்கு ஒரு முறை பவுண்டரி அடிக்கும் வீரராகவும் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரராகவும் ரஹானே சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (குறைந்தது 100 பந்துகளை எதிர்கொண்டவர்கள்)
1. ரஹானே : 3.6 மற்றும் 189.00*
2. கிளேன் மேக்ஸ்வெல் : 3.7 மற்றும் 188.80

இதையும் படிங்க:RR vs RCB : ஹோல்டருக்கு முன்னதாக அஷ்வினை களமிறக்க இதுதான் காரணம். தோல்விக்கு பிறகு – சஞ்சு சாம்சன் கொடுத்த விளக்கம்

மொத்தத்தில் தன்னுடைய 15 வருட ஐபிஎல் கேரியரில் பல்வேறு அணிகளுக்காக அம்பியாகவே செயல்பட்டு வந்த ரகானே இந்த சீசனில் அந்நியனாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று அபார கம்பேக் கொடுத்துள்ளது இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கு வழி ஏற்படுத்தப் போகிறது என்றே சொல்லலாம்.

Advertisement