கடந்த மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரினை சற்று பின்னடைவுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து நேற்று மார்ச் 27-ஆம் தேதி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் காப்பாத்திட்டாரு : அஜின்க்யா ரஹானே
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தால் இரண்டாவது போட்டியில் பலமாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 153 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறுகையில் : முதலில் நாங்கள் பந்துவீசும் போது பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களை சிறப்பாக வீச வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையிலேயே பவர்பிளே ஓவர்களில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அதேபோன்று மிடில் ஓவர்களிலும் எங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
அதிலும் குறிப்பாக மொயின் அலி தனக்கு கிடைத்த வாய்ப்பில் அற்புதமாக செயல்பட்டுள்ளார். இந்த டி20 வடிவத்தில் வீரர்களுக்கு சுதந்திரம் அளிப்பது என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் நாங்கள் எங்களது அணியின் வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அதன் காரணமாகவே அனைவரது செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது. மொயின் அலி இந்த போட்டியில் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை என்றாலும் பந்துவீச்சில் அசத்தி விட்டார்.
இதையும் படிங்க : கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு நாங்க செய்த இந்த தவறு தான் காரணம் – ரியான் பராக் வருத்தம்
அவர் எவ்வளவு ஒரு தரமான பிளேயர் என்பதை இந்த போட்டியில் நிரூபித்து விட்டார் என்று அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது. அவர்கூறியது போன்றே இந்த போட்டியில் பேட்டிங்கில் 12 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் ஆட்டமிழந்த மொயின் அலி பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டு 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.



