
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக இதுவரை 90 ஒருநாள் போட்டிகள், 20 டி20 போட்டிகள் மற்றும் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிட்டத்தட்ட 8500 ரன்களை குவித்துள்ள அஜின்க்யா ரஹானே கடந்த 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரராகவும், துணை கேப்டனாகவும் திகழ்ந்து வந்த அவர் இளம் வீரர்களின் வருகையால் தனது இடத்தினை இழந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரால் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் கம்பேக் கொடுக்க முடியும் என்று இன்றளவும் தனது முயற்சியை கைவிடாமல் இருந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வேளையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் விருப்பத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற நெருப்பு தனக்குள் அணையாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பவதை தான் விரும்புகிறேன். அதுவே என்னுடைய விருப்பம்.
அந்த தீ இன்னும் என்னுள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. உடற்தகுதியை பொருத்தவரை நான் தற்போது பிட்டாக தான் இருக்கிறேன். தற்போதைக்கு ஐபிஎல் தொடரை மட்டுமே கவனத்தில் கொண்டு விளையாடி வருகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : நான் இன்னைக்கு பெரிய பிளேயரா இருக்க காரணமே அவர்தான்.. எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் அவர்தான் – மனதிறந்த கோலி
இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்கிற என்னுடைய நினைப்பை நான் ஒருபோதும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. 100% என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் கம்பேக் கொடுக்கும் வாய்ப்பிற்காக காத்திருப்பேன் என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.