சிஎஸ்கே’வுக்கு விளையாடிய எங்க 3 பேருக்கும் பிட்ச் தெரியும்.. அதை வெச்சு சென்னையை சாய்ச்சுட்டோம்.. ரஹானே பேட்டி

Ajinkya rahane
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி நடைபெற்ற 25வது போட்டியில் சென்னையை அதனுடைய சொந்த மண்ணில் கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவரில் 103/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 31* ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அதே பிட்ச்சில் சென்னையை அடித்து நொறுக்கி 10.1 ஓவரில் 107/2 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டீ காக் 23, சுனில் நரைன் 44, கேப்டன் ரஹானே 20*, ரிங்கு சிங் 15* ரன்கள் எடுத்தார்கள். அதனால் சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து சேப்பாக்கம் மைதானத்திலும் தொடர்ந்து 3 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

கொல்கத்தா வெற்றி:

மறுபுறம் கொல்கத்தா தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்நிலையில் ஆலோசகர் ட்வயன் ப்ராவோ, மொய்ன் அலி மற்றும் தாம் ஆகிய மூவரும் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளதாக கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். அதை வைத்து திட்டங்களை வகுத்து நன்றாக பவுலிங் செய்வது வென்றதாக ரஹானே கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எங்களது திட்டங்களைக் கொண்டிருந்தோம். மொய்ன், நான் இங்கே 2 வருடங்களாக விளையாடியுள்ளோம். ப்ராவோவுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் தெரியும். பிட்ச்சில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. அதற்குத் தகுந்தார் போல் பவுலிங் செய்த எங்களுடைய சுழல் பவுலர்களுக்கு பாராட்டுக்கள். எங்களுடைய திட்டங்கள் இன்று வேலை செய்தன”

- Advertisement -

ரஹானே மகிழ்ச்சி:

“இன்னும் நிறைய போட்டிகள் இருப்பதால் எங்களுடைய திட்டங்களை இங்கே பகிர முடியாது. மொய்ன் அலியை சேர்த்தது கச்சிதமாக அமைந்தது. இங்கே 170 ரன்கள் அடிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எங்களுடைய ஸ்பின்னர்கள் வெளிப்படுத்திய ஆட்டத்தில் இருந்து நீங்கள் பாராட்டுகளை எடுக்க முடியாது. மொய்ன் அலி ஒரு போட்டியில் விளையாடி பெஞ்சில் அமர்ந்து மீண்டும் வந்து அசத்தினார். நரைன், வருண் ஆகியோரும் சிறப்பாக பவுலிங் செய்தனர்”

இதையும் படிங்க: கொல்கத்தாவிடம் போராடமலயே..வரலாறு காணாத தோல்விக்கு இதான் காரணம்.. சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி

“வைபவ், ராணா ஆகியோரும் நல்ல பவுலிங் செய்தனர். கடந்த 2 – 3 வருடங்களாக எனது பேட்டிங்கில் வேலை செய்தது தற்போது மகிழ்ச்சியுடன் விளையாட உதவுகிறது. நிகழ்காலத்தில் இருந்து அனைத்தையும் எளிதாக கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஆரம்பத்தில் ரன் ரேட் பற்றி கவலைப்படவில்லை என்றாலும் 6 ஓவர்கள் முடிந்ததும் அதற்காக வேகமாக விளையாட முயற்சித்தோம். வெற்றி பெற்றாலும் இந்தப் போட்டியிலும் நிறைய பாடங்கள் கிடைத்துள்ளன. வெற்றி தோல்விகளைத் தாண்டி நாங்கள் நேர்மறையாக இருக்க விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement