அதை நினைச்சு பயந்தா விழுந்துருவீங்க.. 199 சேசிங் செய்யாமல் கொல்கத்தா தோற்க இதான் காரணம்.. கேப்டன் ரஹானே

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கொல்கத்தாவில் 39வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தா தங்களது சொந்த மண்ணில் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் கேப்டன் கில் 90, சாய் சுதர்சன் 52, ஜோஸ் பட்லர் 41* ரன்களை எடுத்த உதவியுடன் 199 என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.

அடுத்து விளையாடிய கொல்கத்தா ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 159/8 ரன்களை மட்டுமே எடுத்து தங்களுடைய ஐந்தாவது தோல்வியைப் பதிவு செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 50 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக ரசித் கான், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் 6வது வெற்றியைப் பெற்ற புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

கொல்கத்தா தோல்வி:

இந்நிலையில் 199 ரன்கள் சேசிங் செய்திருக்க வேண்டிய இலக்கு என்றாலும் தங்களுடைய பேட்டிங் சிறப்பாக செயல்படாதது தோல்வியைக் கொடுத்ததாக கொல்கத்தா கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியுள்ளார். மேலும் அவுட்டாகி விடுவோம் என்று பயந்தால் அவுட்டாகி விழுந்து விடுவீர்கள் என்றும் அவர் தங்களுடைய பேட்ஸ்மேன்களை சாடியுள்ளார். எனவே வெற்றிக்கு பயப்படாமல் தைரியமாக விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“199 சேசிங் செய்யக்கூடிய இலக்கு என்று நான் நினைத்தேன். நாங்கள் பந்து வீச்சில் நல்ல கம்பேக் கொடுத்தோம். உங்களுடைய ஓப்பனிங் வீரர்களிடம் நல்ல துவக்கத்தை எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அவர்கள் இத்தொடர் முழுவதுமே தடுமாற்றமாக விளையாடி வருகின்றனர். நாங்கள் வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும். பிட்ச் ஸ்லோவாக இருந்த போதிலும் நாங்கள் பௌலிங் செய்த போது 210 – 200 ரன்களுக்குள் எதிரணியை மடக்கினால் போதுமானது என்று நினைத்தோம்”

- Advertisement -

ரஹானே அதிருப்தி:

“நாங்கள் மிடில் ஓவரில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். எங்களுடைய பவுலர்கள் மீது எந்த புகாரும் இல்லை. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற விஷயங்கள் இருக்கின்றன. ஆம் ஃபீல்டிங் துறையில் 15 – 20 ரன்களை சேமித்திருந்தால் அது வெற்றியில் பங்காற்றும். இவை அனைத்தும் அணுகுமுறையை பொறுத்தது”

இதையும் படிங்க: அந்த 2 மேட்ச்ல ஜெய்ச்ச குஜராத் கண்டிப்பா பிளே ஆஃப் போய்டும்.. கொல்கத்தாவை வீழ்த்திய ஆட்டநாயகன் கில் பேட்டி

“எங்களுடைய வீரர்கள் கடினமாக உழைக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நேர்மறையான மனதுடன் தைரியமான பேட்ஸ்மேனாக செயல்பட வேண்டும். நீங்கள் அவுட்டாவதைப் பற்றி சிந்தித்தால் அவுட்டாகி விடுவீர்கள். மாறாக எப்படி பௌண்டரி அடிக்கலாம் என்பது போன்றவற்றை சிந்திக்க வேண்டும். எங்களின் தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நான் ஆதரவுக் கொடுக்கிறேன். ஆனால் அவர்கள் தைரியமாக விளையாட வேண்டும். ரகுவன்சி பேட்டிங்கில் அசத்துவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement