IPL 2023 : நான் ஏன் அவங்கள காப்பி அடிக்கணும்? சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடும் ரகசியம் பற்றி ரகானே பேட்டி

Rahane-csk
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அந்த அணிக்கு இந்த சீசனில் அசத்தி வரும் நிறைய வீரர்களுக்கு மத்தியில் நட்சத்திர இந்திய அனுபவ வீரர் அஜிங்க்ய ரகானே அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்து வருகிறது. ஏனெனில் 2011ஆம் ஆண்டு இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2015 உலகக்கோப்பையில் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடினார்.

- Advertisement -

ஆனால் அதன் பின் சற்று மெதுவாக விளையாடிய காரணத்தாலும் ஐபிஎல் தொடரில் தடுமாறிய காரணத்தாலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வந்தார். குறிப்பாக 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலி இல்லாத நிலைமையில் இந்தியாவை அபாரமாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று கொடுத்த அவர் அத்தொடருக்கு பின் சதமடிக்காமல் தடுமாறியதால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கழற்றி விடப்பட்டுள்ளார்.

சான்ஸ் முக்கியம்:
அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் இந்த சீசனில் வெறும் 50 லட்சத்துக்கு தன்னை நம்பி வாங்கிய சென்னை அணிக்கு முதல் போட்டியிலேயே தான் பிறந்து வளர்ந்த மும்பைக்கு எதிராக 19 பந்துகளில் அரை சதமடித்து இதுவரை 209 ரன்களை 199.05 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வருகிறார். அதை விட பொதுவாகவே புத்தகத்தில் இருக்கும் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய அவர் இந்த சீசனில் விக்கெட் கீப்பருக்கு பின் திசைகளில் வித்யாசமான ஷாட்களை அடித்து இவராலும் இப்படி அடிக்க முடியுமா என்று வியப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Ajinkya Rahane Ramp

அது போக 2008 – 2022 வரை இதற்கு முன் விளையாடிய 15 வருடங்களில் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடிக்காத அவர் இந்த சீசனில் 2 போட்டிகளில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை விளாசியுள்ளார். அதன் உச்சகட்டமாக கொல்கத்தாவுக்கு எதிராக 71* (29) ரன்களை 244.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் 7 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று அபார கம்பேக் கொடுத்து 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனல் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். அப்படி அம்பியாக இருந்த அவர் அந்நியனாக அதிரடி காட்டுவதற்கு தோனி தலைமையில் சென்னை கொடுக்கப்படும் ஆதரவும் சுதந்திரமும் உதவியதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வருடம் தொடர்ந்து அதிரடியாக விளையாடுவதற்கு சென்னை அணியில் கொடுக்கப்படும் தொடர்ச்சியான வாய்ப்புகள் தான் காரணம் என்று ரகானே தெரிவித்துள்ளார். சமீபத்திய வருடங்களில் எந்த அணியிலும் தமக்கு தொடர்ந்து விளையாடுவதற்கு கிடைக்காத வாய்ப்பு சென்னை அணியில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி கொல்கத்தா போட்டிக்கு பின் பேசியது பின்வருமாறு.

Rahane CSK

“தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு பெற்றதே இந்த சீசனில் எனக்கு கிடைத்த திருப்பு முனையாகும். கடந்த வருடம் அல்லது சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் பார்க்கும் போது எனக்கு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை உங்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் இது போன்ற ஷாட்களை அடிக்க முடியும்? என்பதை எவ்வாறு காட்ட முடியும். ஆனால் சென்னை அணியில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சென்னை என்னை வாங்கிய போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்”

இதையும் படிங்க:சி.எஸ்.கே அணியில் சேர்ந்த அதிர்ஷ்டம். கைமேல அடித்த ஜாக்பாட் – ரஹானேவே இதை எதிர்பார்த்து இருக்கமாட்டாரு

“ஏனெனில் தோனி தலைமையில் நீங்கள் விளையாடும் போது ஒரு வீரராக பேட்ஸ்மேனாக முன்னேறுவதற்கு தேவையானவற்றை கற்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான ஸ்டைல் இருக்கும். அந்த வகையில் பந்தை சரியான டைமிங் கொடுத்து அடிப்பதே என்னுடைய ஸ்டைலாகும். அத்துடன் யாரோ ஒருவரை காப்பி அடிப்பதற்கு பதிலாக உங்களுடைய ஆட்டத்திற்கு நீங்களே ஆதரவு கொடுப்பது முக்கியமாகும். இங்கு சில பவர் ஹிட்டர்கள் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் உங்களுடைய ஸ்டைலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement