எத்தனை பேர் வந்தாலும் 2026 ஐ.பி.எல் தொடருக்கான கே.கே.ஆர் அணியின் கேப்டன் இவர்தான் – விவரம் இதோ

KKR
- Advertisement -

எதிர்வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது அண்மையில் அபுதாபியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தின் போது 64 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய கையிருப்பு தொகையுடன் ஏலத்தில் பங்கேற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பல்வேறு வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்களது அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

2026 ஐ.பி.எல் தொடருக்கான கே.கே.ஆர் கேப்டன் இவர்தான் :

குறிப்பாக ஆண்ட்ரே ரசல் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளதால் அதிரடியான பேட்ஸ்மேன்களை கருத்தில் கொண்டு கொல்கத்தா அணி நிர்வாகம் முக்கிய வீரர்கள் பலரை வாங்கியுள்ளது. அந்த வகையில் பின் ஆலன், கேமரூன் கிரீன், ராகுல் திரிப்பாதி, டிம் சைபர்ட் என பல்வேறு பேட்ஸ்மேன்களை ஏலத்தில் எடுத்துள்ளார்கள்.

- Advertisement -

பந்துவீச்சு துறையிலும் முஸ்தபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரானா போன்ற வீரர்களை எடுத்து பந்துவீச்சு துறையையும் பலப்படுத்தியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படி பல்வேறு வீரர்கள் அணிக்குள் வந்தாலும் அடுத்த ஆண்டு கொல்கத்தாவின் கேப்டனாக அஜின்க்யா ரஹானேவே தொடர்வார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏனெனில் நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் 25 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு கேமரூன் கிரீன் வாங்கப்பட்டிருந்தாலும் இதுவரை அவருக்கு பெரியளவில் கேப்டன்சி அனுபவம் கிடையாது. அதேபோன்று அவருக்கு அடுத்து 18 கோடி ரூபாய்க்கு பதிரானாவை அவர்கள் விலைக்கு வாங்கி இருந்தாலும் அவர் இம்பேக்ட் ப்ளேயராக மட்டுமே விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

அவர்களை தவிர்த்து பின் ஆலன், சுனில் நரேன் இருந்தாலும் அவர்களுக்கு கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காது. அதேபோன்று இந்திய வீரர்களான ரகுவன்சி, ரிங்கு சிங், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, ஆகியோர் இருந்தாலும் அவர்களுக்கும் இதுவரை கேப்டன்சி செய்த அனுபவம் கிடையாது. எனவே ஐபிஎல் ஆரம்பித்தது முதல் விளையாடி வரும் அஜின்க்யா ரஹானே தான் 2026-ஆம் ஆண்டும் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட உள்ளதால் ஹார்டிக் பாண்டியா எடுத்த புதிய முடிவு – விவரம் இதோ

அவரது அனுபவம், திறமையும் நிச்சயம் கே.கே.ஆர் அணிக்கு உதவும் என்பதனால் அவரே கேப்டனாக தொடர்வார். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி 2024-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கடுத்து அவர் வெளியேற்றப்பட்டதால் 2025-ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்காக ரஹானே கேப்டனாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement