இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. அதற்கடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே சூரியகுமார் யாதவின் தலைமையில் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஒருநாள் போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஹார்டிக் பாண்டியா எடுத்துள்ள புதிய முடிவு :
அதனால் இன்னும் சில தினங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவிற்கு ஓய்வு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஏனெனில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த ஓய்வினை பிசிசிஐ வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் நியூசிலாந்து அணிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் நிச்சயம் பங்கேற்று விளையாடுவார்.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தனக்கு ஓய்வு கிடைக்கும் என்பதை புரிந்து கொண்ட ஹார்டிக் பாண்டியா தொடர்ந்து தான் மேட்ச் ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு புதிய முடிவை கையில் எடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறும் போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் பரோடா அணிக்காக விளையாட அவர் முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் எதிர்வரும் ஜனவரி 3-ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிரான போட்டியிலும், ஜனவரி 8ஆம் தேதி சண்டிகார் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கு நடுவில் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான போட்டியில் பணிச்சுமை காரணமாக அவர் விளையாட மாட்டார் என்றும் பரோடா நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா மட்டும் இந்த முடிவை எடுத்தா இந்திய அணியை அடிச்சிக்க முடியாது – ராபின் உத்தப்பா கருத்து
இதன் காரணமாக நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஹார்டிக் பாண்டியா இரண்டு விஜய் ஹசாரே போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறார். 50 ஓவர் போட்டிகளில் மீண்டும் ஹார்டிக் பாண்டியா விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்திவுள்ள வேளையில் இந்திய ஒருநாள் அணிக்கும் இது நல்ல செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



