469 ரன்ஸ்.. வீணாகாத அனுபவ உழைப்பு.. கொல்கத்தா கேப்டனாக ரஹானே நியமனம்.. துணை கேப்டனும் அறிவிப்பு

Ajinkya Rahane
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் கொல்கத்தா தங்களது முதல் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. முன்னதாக கடந்த வருடம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 3வது கோப்பையை வென்று கொல்கத்தா சாதனை படைத்தது. ஆனால் இந்த வருடம் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி மிகப்பெரிய தொகைக்கு வாங்கி தங்களது கேப்டனாக நியமித்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக அனுபவ நட்சத்திர வீரர் அஜிங்கிய ரகானே நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரகானே ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளார். அதை விட ஆஸ்திரேலியாவில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

வீணாகாத உழைப்பு:

அப்போது நாடு திரும்பிய விராட் கோலிக்கு பதிலாக பொறுப்பேற்ற ரகானே தலைமையில் அபாரமாக விளையாட இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ள ரகானே மும்பை அணியை அபாரமாக வழி நடத்தி 2023 – 24 ரஞ்சிக் கோப்பையை கேப்டனாக வெல்ல உதவினார்.

மேலும் 2024 – 25 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிக (469) ரன்கள் குவித்து சாதனை படைத்த அவர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மும்பை கோப்பையை வெல்ல உதவினார். அந்த வகையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் உள்ளூரில் அவர் தொடர்ந்து உழைத்து வருகிறார். அதன் பயனாக கொல்கத்தா அணியின் கேப்டனாக தற்போது ரகானே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

கொல்கத்தா கேப்டன்:

கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த அவரை இந்த வருடம் 1.5 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. உள்ளூர் ஐபிஎல் மற்றும் சர்வதேச அளவில் வீரராகவும் கேப்டனாகவும் நல்ல அனுபவத்தைக் கொண்டிருப்பதால் தற்போது ரகானேவை கொல்கத்தா கேப்டனாகவும் நியமித்துள்ளது. அவருக்கு உதவியாக 23.75 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரோஹித் சொல்வது உண்மையில்லை.. தனது நெட் பிராக்டீஸ் குறித்து ரகசியத்தை வெளியிட்ட – வருண் சக்ரவர்த்தி

இது பற்றி 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள கொல்கத்தாவை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமையான விஷயம் என்பது ரஹானே கூறியுள்ளார். மேலும் கொல்கத்தா அணியில் நல்ல சமநிலை இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே இந்த வருடம் கோப்பையை தக்க வைப்போம் என்றும் ரஹானே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Advertisement