இதெல்லாம் நியாயமே இல்ல. அவங்கள எதுக்கு டீம்ல இருந்து தூக்குனீங்க – அஜய் ஜடேஜா காட்டம்

Ajay
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே தற்போது இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

Bishnoi

- Advertisement -

நாளை மறுதினம் பிப்ரவரி 24-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடருக்கான இந்திய அணி மற்றும் மார்ச் மாதம் முதல் வாரம் ஆரம்பிக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியையும் ஏற்கனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த வேளையில் அந்த அணியில் அனுபவ வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேபோன்று விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா மற்றும் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பினை மறுத்துள்ளது. அதோடு இந்த தொடரில் அவர்கள் நீக்கப்பட்டுள்ளதால் இனிவரும் தொடர்களில் அவர்கள் இந்திய அணியில் இணைவது கடினம் என்று கூறப்படுகிறது.

pujara 1

இந்நிலையில் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் தேர்வுக் குழுவினரால் நீக்கப்பட்டுள்ளது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கவாஸ்கர் கருத்து கூறியிருந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா அவர்களை நீக்கியது நியாயமற்றது என தேர்வுக் குழுவை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்தது உண்மைதான். ஆனால் அந்த ஒரு தொடரை இழந்ததற்காக அவர்கள் இருவரையும் நீக்கியதில் நியாயமும் இல்லை.

- Advertisement -

அவர்கள் இருவரும் நீக்கப்பட்டது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்கள் இருவராலும் இந்திய அணி உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர்கள் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளது மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறியுள்ளார். ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் 80 முதல் 90 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் உள்ளவர்கள்.

இதையும் படிங்க : இஷான் கிஷன் நல்லா தான் ஆடுறாரு. ஆனா அவர் பண்ற தப்பு என்ன தெரியுமா? – சுட்டிக்காட்டிய முன்னாள் வீரர்

அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்ப இனி வாய்ப்பு இல்லை. ஏனெனில் அடுத்த தலைமுறை வீரர்கள் அவர்களுக்கான வாய்ப்புக்காக காத்திருப்பதால் இனி அவர்கள் திரும்புவது கடினம்தான். இது எல்லா வீரர்களுக்கும் உள்ள நிலைமை தான் என்றும் அஜய் ஜடேஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement