IND vs ZIM : சச்சினையே தூங்கவிடாமல் கஷ்டப்படுத்திய பவுலர் அவர்தான் – அஜய் ஜடேஜா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Ajay
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஒவ்வொரு ஆண்டும் ஜிம்பாப்வே அணியுடன் கிரிக்கெட் விளையாட வில்லை என்றாலும் இவ்விரு அணிகளும் தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடிய காலம் ஒன்று இருந்தது. அந்த வகையில் 1990-களில் ஜிம்பாப்வே அணி பல நட்சத்திர வீரர்களை தங்கள் வசம் வைத்திருந்தது.

Shikhar-Dhawan

- Advertisement -

அந்த நேரத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டிகளும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனாலும் அதில் பெரும்பாலும் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கும். அதேபோன்று இந்தியா, ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கலந்துகொண்டு கோ கோ கோலா தொடரிலும் விளையாடியது.

அப்படி அந்த சூழலில் சச்சின் டெண்டுல்கரை பதற வைத்த பவுலர் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா சில சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Henry Olonga

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் போது இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹென்றி ஒலாங்கா அப்போது சச்சின் விக்கெட்டை எடுத்து மிகவும் பிரபலமானார். இந்திய அணியை ஒரு போட்டியில் வீழ்த்தும் அளவிற்கு அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார். அந்த போட்டியில் ஷார்ட் பிட்ச் பந்துவீசிய ஒலாங்கா சச்சினின் விக்கெட்டை எடுத்திருந்தார்.

- Advertisement -

அந்த பந்து உண்மையில் சச்சினை மிகவும் பாதித்தது. அந்த இரண்டு நாட்கள் அவர் தூங்கவில்லை. இரவு முழுவதும் சச்சின் வருத்தத்துடன் காணப்பட்டார். நாங்கள் ஒருபோதும் சச்சினை அப்படி பார்த்ததே இல்லை. எனினும் அதே தொடரின் இறுதி போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தலான வெற்றியும் சச்சின் பெற்றுக் கொடுத்தார் என அஜய் ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs ZIM : இந்த 2 விஷயமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வெற்றிக்கு பிறகு பேசிய – ஆட்டநாயகன் சாம்சன்

அதோடு ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 370 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோன்று ஜிம்பாப்வே மண்ணில் சதம் அடித்த வீரராகவும் சச்சின் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement