
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியின் இந்த செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது.
அதிலும் குறிப்பாக சவால் வாய்ந்த இங்கிலாந்து மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கிலும், இந்திய பவுலர்கள்பந்துவீச்சிலும் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த தொடரின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களுடன் 754 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அடித்த 754 ரன்கள் விட ரவீந்திர ஜடேஜா அடித்த 516 ரன்கள் தான் மிகச் சிறப்பான ஆட்டம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 754 ரன்கள் அடித்திருந்தாலும், ரவீந்திர ஜடேஜா கிட்டத்தட்ட 550 ரன்கள் வரை அடித்துள்ளார். இந்த தொடரில் என்னை பொறுத்தவரை சுப்மன் கில்லை விட ரவீந்திர ஜடேஜா தான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறுவேன். அந்த அளவிற்கு தரமான செயல்பாட்டை ரவீந்திர ஜடேஜா வெளிப்படுத்தியுள்ளார்.
ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே பின்வரிசை வீரர்களை வைத்து அவர் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளார். அதுதவிர்த்து அவர் இந்த தொடரில் 6 அரைசகங்களை அணிக்கு தேவையான நேரத்தில் அடித்திருக்கிறார். எனவே தான் அவருடைய ஆட்டம் நிலையானது என்று கூறுகிறேன்.
இதையும் படிங்க : ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்த – ஸ்டூவர்ட் பிராடு
நடைபெற்று முடிந்த இந்த டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தன்னால் முடிந்தவரை பந்துவீச்சாளர்களை வைத்து இறுதிவரை ரவீந்திர ஜடேஜா போராடி இருந்தார். அவருடைய அந்த இன்னிங்ஸ் என்றும் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸ்ஸாக இந்திய அணியின் சார்பாக எப்போதுமே இருக்கும் என அஜய் ஜடேஜா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.