- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்பெஷலான ரிஷப் பண்ட் தோனியை விட சிறந்தவர் சொல்லாதீங்க.. காரணம் இது தான்.. அஜய் ஜடேஜா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் 2வது இன்னிங்ஸில் சதமடித்து 109 ரன்கள் குவித்து அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் வாழ்நாள் சாதனையை (தலா 6) சமன் செய்தார்.

அதனால் தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர் என்று சில முன்னாள் வீரர்களும் இந்திய ரசிகர்களும் பாராட்டுகின்றனர். இந்நிலையில் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் தோனி ஏற்படுத்திய தாக்கத்தை டெஸ்ட் போட்டிகளில் ரிசப் பண்ட் ஏற்படுத்துவதாக முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

தோனியை விட சிறந்தவரா:

இருப்பினும் தோனி விளையாடிய 2004 – 2014 காலகட்டங்களில் சச்சின், டிராவிட், சேவாக், கங்குலி இந்திய பேட்டிங் துறையில் ராஜாங்கம் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். அதனால் ரிஷப் பண்ட் போல 5வது பேட்டிங் இடத்தில் வாய்ப்பை பெறாத தோனி பெரும்பாலும் 6, 7, 8 போன்ற கீழ் வரிசையில் விளையாடியதாக அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். எனவே தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்தவர் என்று சொல்வதில் அர்த்தமில்லை என அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தோனி அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் அவர் லோயர் ஆர்டரில் இந்தியாவுக்கு தேவைப்பட்டார். மறுபுறம் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் பேட்ஸ்மேன் கீப்பராக இருக்கிறார். எனவே அவர் இந்த சாதனை படைத்ததில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இது ஏதோ ஒரு தருணத்தில் நடந்தாக வேண்டும்”

- Advertisement -

அபாரமான பண்ட்:

“இந்த நேரத்தில் அவர் சில 90 ரன்களையும் எடுத்தவர் என்பதை மறக்கக்கூடாது. ஒருவேளை அதையும் சதமாக அடித்திருந்தால் இந்நேரம் அவர் 12 சதங்கள் அடித்திருக்கக்கூடும். வித்தியாசமான கிளாஸ் கொண்டுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கீப்பர் பேட்ஸ்மேனாக வருவார். அவருக்கு மாற்றானவர் கிடையாது. துருவ் ஜுரேல் இருந்தாலும் அவர் ஸ்பெஷல் பிளேயர். நம்பர்கள் அடிப்படையில் அவரை தோனியுடன் ஒப்பிடுகிறோம்”

இதையும் படிங்க: மஹி பாய் ஏரியா சென்னையில் சாதனை.. தோனியை விட நான் தான் சிறந்த கீப்பரா? ரிஷப் பண்ட் பதில்

“ஆனால் நான் அதை செய்ய மாட்டேன். ஏனெனில் அது சுண்ணாம்பு மற்றும் பாலாடைக்கட்டி போன்றது. ஆம் அவர் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதற்காக அவரை விட சிறந்தவர் அல்லது இல்லை என்று நான் கூறவில்லை. தோனி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த போது 4 ஜாம்பவான்கள் இருந்தனர். அதனால் தோனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் ரிஷப்பிடம் இருக்கும் திறமை தற்சமயத்தில் மற்றவர்களிடம் இல்லை. எனவே அதை ஆராய்வதை தவிர்த்து விட்டு அனுபவிப்பது நல்லது” என்று கூறினார்.

- Advertisement -