இந்திய முன்னாள் வீரரான அஜய் ஜடேஜாவிற்கு கோவா போலீசார் போட்ட 5000 ரூபாய் அபராதம் – எதற்கு தெரியுமா ?

Ajay
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா சூதாட்ட பிரச்சினையில் சிக்கி இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேறியவர். இருப்பினும் தான் விளையாடிய காலத்தில் அட்டகாசமான வீரராகத் திகழ்ந்த ஜடேஜா தற்போது கிரிக்கெட் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவ்வப்போது வர்ணனையாளராகவும் அவர் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

ajay jadeja

- Advertisement -

இந்நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கில் இருந்த மக்கள் தற்போது மெல்ல மெல்ல வெளியே செல்ல தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சுற்றுலாவிற்காக கோவா சென்றுள்ள அஜய் ஜடேஜா அம்மாநில போலீசாரால் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டது தற்போது வைரலான செய்தியாக மாறி வருகிறது.

அதன்படி 28ஆம் தேதி கோவாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு சென்ற ஜடேஜா அங்குள்ள பங்களாவில் தங்கியுள்ளார். மேலும் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து குப்பைகளை எடுத்து சென்ற ஜடேஜா அதை பொதுவெளியில் கொட்டியதால் அவர்மீது அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுக்கும் விதத்தில் ரூபாய் 5000 அபராதம் விதித்துள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajay-jadeja

இந்திய அணியின் முன்னாள் வீரரான இவர் 1992ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி சுமார் 15 டெஸ்ட் போட்டிகள் 196 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement