நான் டி20 அணியை செலக்ட் பண்ணா அதுல விராட் கோலியை எடுக்க மாட்டேன். ஏன் தெரியுமா? – அஜய் ஜடேஜா பேட்டி

Ajay-Jadeja-and-Virat-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை அடித்த விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் விளையாடி வருவதால் ஆரம்பத்தில் சிறிதாக இருந்த விமர்சனமானது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டு வருவதால் அவரது விடயத்தில் இந்திய அணியின் நிர்வாகம் என்ன முடிவினை எடுக்கப் போகிறது என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Virat-Kohli

- Advertisement -

ஏனெனில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் தொடர்களில் பெரிய வீரர் என்பதனால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தாலும் அவரது மோசமான ஆட்டம் அணியின் நிர்வாகத்தை கலங்க வைத்துள்ளது. அதோடு அவருக்கு பதிலாக அப்போது வாய்ப்புகளை பெறும் இளம் வீரர்கள் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடுவதால் விராட் கோலியின் இடம் பறிபோகும் ஆபத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை 98 போட்டியில் விளையாடிய கோலி 3297 ரன்களை விளாசி இருந்தாலும் கடைசியாக நடைபெற்ற பல போட்டிகளில் அவர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டம் இழந்து வெளியேறி வருகிறார்.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்ற கோலி விரைவாக ரன் சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில் 3 பந்துகளை சந்தித்து நிலையில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த போட்டியிலும் விராட் கோலி சொதப்பியதால் அவர் மீது தற்போது ஏகப்பட்ட விமர்சனம் எழுந்துள்ளன. அதே வேளையில் விராட் கோலி மிகப்பெரிய அழுத்தத்திற்கு மத்தியில் தற்போது சிக்கியிருக்கும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா தான் ஒருவேளை இந்திய அணியை தேர்வு செய்தால் அதில் நிச்சயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி இடம் பெற மாட்டார் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

Kohli

இது குறித்து அவர் கூறுகையில் : இங்கு விராட் கோலி ரன் அடிக்காதது மட்டும் பிரச்சனை கிடையாது. டி20 கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய சாதனையை தன் பக்கம் வைத்திருந்தாலும் தற்போது உள்ள பார்ம் படி அவர் ரன்குவிக்க தடுமாறுவதோடு மட்டுமின்றி ஸ்ட்ரைக் ரேட்டிலும் படுமோசமாக விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் அழுத்தத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

- Advertisement -

தற்போதுள்ள சூழலில் அவரை இந்திய அணியில் இணைத்து நமக்கு நாமே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதை விட அவரை தேர்வு செய்யாமல் இருந்தால் நிச்சயம் இந்திய அணி சிறப்பாக செயல்படும். அதோடு அவரும் ஒரு ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தனது பார்மை எட்டியவுடன் அணிக்கு திரும்பினால் அது அவருக்கும் நல்லது. என்னை பொறுத்தவரை நான் ஒரு அணியை தேர்வு செய்யும் பட்சத்தில் நிச்சயம் விராட் கோலி அந்த அணியில் இருக்க மாட்டார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நிச்சயமா டிராவிட் கிட்ட உக்காந்து பேச போறேன். அவங்களும் பாவம் தான – கேப்டன் ரோஹித் வெளிப்படை

அதோடு இனிவரும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விராட் கோலி விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து ரோஹித் சர்மா தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement