நிச்சயமா டிராவிட் கிட்ட உக்காந்து பேச போறேன். அவங்களும் பாவம் தான – கேப்டன் ரோஹித் வெளிப்படை

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட t20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையே முதலாவதாக நடைபெற்ற டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் முதலாவதாக விளையாடி 170 ரன்களை குவிக்க இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியால் 121 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் இரண்டு பூஜ்ஜியம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது t20 போட்டி இன்று நடைபெற உள்ள வேளையில் மூன்றாவது போட்டிக்கான அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து இரண்டாவது போட்டி முடிந்த பின்னர் அளித்த பேட்டியில் ரோகித் சர்மா வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்படி ரோகித் சர்மா நேற்றைய இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின்னர் வெற்றிக்கான காரணங்களை கூறியதற்கு பிறகு சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

INDIA IND vs ENG Rohit Sharma

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளதால் அடுத்ததாக மூன்றாவது போட்டியில் சில மாற்றங்களை செய்ய விரும்புகிறோம். அதன்படி நாங்கள் அணிக்கு வெளியில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு இந்த மூன்றாவது போட்டியில் வாய்ப்பு அளிக்க நினைக்கிறோம்.

- Advertisement -

நான் இதுகுறித்து நிச்சயம் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிடம் அமர்ந்து பேச இருக்கிறேன். மேலும் இந்த மூன்றாவது போட்டியிலும் அனைத்து விதங்களிலும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : இந்த ஆட்டம் போதுமா, அபார சாதனையுடன் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா

ரோகித் சர்மாவின் இந்த பேட்டி காரணமாக நிச்சயம் இன்றைய மூன்றாவது டி20 போட்டியில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இந்த தொடரில் விளையாடாத சில இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement