IND vs ENG : இந்த ஆட்டம் போதுமா, அபார சாதனையுடன் சஞ்சய் மஞ்சரேக்கருக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா

Sanjay
- Advertisement -

பர்மிங்காம் நகரில் ஜூலை 9-ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிரடியான வெற்றியைப் பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கடுமையாக போராடி 170/8 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 89/5 என தடுமாறிய இந்தியாவுக்கு அதிக பட்சமாக கடைசி வரை அவுட்டாகாமல் போராடிய ரவிந்திர ஜடேஜா 5 பவுண்டரியுடன் 46* (29) ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 31 (20) ரன்களும் ரிஷப் பண்ட் 26 (15) ரன்களும் எடுத்தனர்.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

- Advertisement -

இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 171 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் பந்திலேயே ஜேசன் ராயை கோல்டன் டக் அவுட் செய்த புவனேஸ்வர் குமார் அடுத்த ஓவரில் கேப்டன் ஜோஸ் பட்லரை 4 (5) ரன்களில் காலி செய்து இந்தியாவுக்கு அபாரமான தொடக்கம் கொடுத்தார். அதனால் 11/2 என ஆரம்பமே சரிந்த இங்கிலாந்தை டேவிட் மாலன் 19 (25) லியம் லிவிங்ஸ்டன் 15 (9) ஹரி ப்ரூக் 8 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் கைவிட்டனர்.

இந்தியா பதிலடி:
அதனால் 60/6 என மொத்தமாக சரிந்த இங்கிலாந்துக்கு கடைசியில் மொயீன் அலி 35 (21) ரன்களும் டேவிட் வில்லி 33* (22) ரன்களும் எடுத்து போராடிய போதிலும் இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறியதால் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகன் விருதை வெல்ல அவருடன் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Ravindra Jadeja IND vs ENg

இத்தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே வென்றிருந்த இந்தியா இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை வென்று சமீபத்திய டெஸ்ட் போட்டியில் அவமானமான தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது. இதை தொடர்ந்து இன்று நடைபெறும் 3-வது மற்றும் கடைசி போட்டியிலும் வென்று 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்ய இந்தியா போராட உள்ளது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் இந்தியா ஒரு கட்டத்தில் 150 ரன்களை தாண்டாது என்று ரசிகர்கள் கவலையடைந்த போது நான் இருக்கிறேன் என்ற வகையில் 11-வது ஓவரில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானமாகவும் பொறுப்பாகவும் அதேசமயம் அதிரடியாக ரன்களை சேர்த்து பேட்டிங்கில் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் சென்னையில் கொடுக்கப்பட்ட தேவையற்ற கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மொத்தமாக தடுமாறிய அவர் காயத்தால் வெளியேறினார்.

Sanjay

ஆட்டம் போதுமா:
அதனால் சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்ட அவருக்கு பதிலாக அக்சர் படேல், ஹர்டிக் பாண்டியா போன்ற இதர ஆல்-ரவுண்டர்கள் சிறப்பாக செயல்பட்டதால் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் ஜடேஜாவுக்கு இடம் கிடைப்பது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தார். அந்த நிலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் திரும்பிய அவர் இதேபோல் இந்தியா 98/5 என தடுமாறியபோது ரிஷப் பண்ட் உடன் இணைந்து 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார்.

- Advertisement -

அதிலும் இதுநாள் வரை இந்திய மண்ணில் மட்டுமே சதமடித்திருந்த அவர் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் சதமடித்து தன் மீது வைக்கப்பட்டிருந்த அரைகுறை விமர்சனங்களையும் சுக்குநூறாக உடைத்தார். அதன்பின் பங்கேற்ற இப்போட்டியிலும் இந்தியா தடுமாறியபோது 6-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி தூக்கி நிறுத்திய அவர் இங்கிலாந்து மண்ணில் 6-வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 46*, 2022
2. யூசுப் பதான் : 33*, 2009
3. சுரேஷ் ரெய்னா : 33, 2011

Jadeja

மஞ்ரேகருக்கு பதிலடி:
மேலும் டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் ரவிந்திர ஜடேஜா பதிவு செய்துள்ளார். இதற்கு முன் கடந்த பிப்ரவரியில் இலங்கைக்கு எதிராக தரம்சாலாவில் நடந்த போட்டியில் 45* ரன்கள் குவித்திருந்ததே அவரின் முந்தைய அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

- Advertisement -

அதைவிட இந்த 2022இல் 3*, 45*, 22*, 175*, 4, 22, 104, 23, 46* என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 444* ரன்களை 111.00 என்ற அபாரமான சராசரியில் ஜடேஜா எடுத்துள்ளார். இது உலக அளவில் இந்த வருடம் விளையாடும் இதர பேட்ஸ்மேன்கள் வைத்துள்ள சராசரியைக் காட்டிலும் அதிகமாகும்.

இதையும் படிங்க : IND vs ENG : காயத்தை வென்று 34 வயதில் அறிமுகமாகி அசத்தும் இங்கி வீரர் – இந்திய ரசிகர்களே மனதார பாராட்டு

மொத்தத்தில் முடிந்த அளவுக்கு அற்புதமாக செயல்பட்டு வரும் ஜடேஜா தாம் டி20 உலக கோப்பையில் ஆல்-ரவுண்டராக விளையாட தகுதியானவன் என்று நிரூபித்து சஞ்சய் மஞ்சரேக்கருக்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement