IND vs ENG : காயத்தை வென்று 34 வயதில் அறிமுகமாகி அசத்தும் இங்கி வீரர் – இந்திய ரசிகர்களே மனதார பாராட்டு

RIchard Gleeson IND vs ENG
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் புதிய கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்த இங்கிலாந்து 2 – 0* என்ற கணக்கில் தொடரை இழந்து தலை குனிந்துள்ளது. முதல் போட்டியிலேயே 50 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்த அந்த அணி இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டியில் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் போராடி 170/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 46* (29) ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 31 (20) ரன்களும் எடுத்தனர்.

Ravindra Jadeja IND vs ENg

- Advertisement -

இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 171 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து ஜேசன் ராய் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக ஜோஸ் பட்லர் 4 (5) டேவிட் மாலன் 19 (25) லியாம் லிவிங்ஸ்டன் 15 (9) ஹரி ப்ரூக் 8 (9) சாம் கரண் 2 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 60/6 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு இறுதியில் மொய்ன் அலி 35 (21) ரன்களும் டேவிட் வில்லி 33* (22) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறியதால் 17 ஓவர்களில் 121 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோற்றது.

கலக்கிய கிலீசன்:
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து இன்று நடைபெறும் 3-வது போட்டியிலாவது வென்று குறைந்தது வைட்வாஷ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட தயாராகியுள்ளது. முன்னதாக பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இங்கிலாந்துக்காக 34 வயது வீரர் ரிச்சர்ட் கிலீசன் அறிமுகமாக களமிறங்கினார். அந்த நிலைமையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு முதல் முறையாக ஓபனிங் ஜோடியாக களமிறங்கிய ரோஹித் சர்மா – ரிஷப் பண்ட் ஆகியோர் பவ்ர்ப்ளே ஓவரில் அதிரடியாக பேட்டிங் செய்து 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினர்.

IND vs ENG Jos Buttler

அப்போது 5-வது ஓவரை வீசிய கிலீசன் 5-வது பந்தில் ரோகித் சர்மாவை அவுட் செய்து 7-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் என 3 முக்கிய வீரர்களை 4 பந்து இடைவெளியில் அடுத்தடுத்து அவுட் செய்து அற்புதமாக பந்து வீசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். மொத்தம் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 15 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் 3.75 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்துவீசி அறிமுக போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டது இந்திய ரசிகர்களையே பாராட்ட வைத்தது. இந்த நிலைமையில் அவரின் கிரிக்கெட் கேரியர் கதையை கேட்டால் நிச்சயமாக இந்திய ரசிகர்கள் அனைவருமே பாராட்டுவார்கள்.

- Advertisement -

காயத்தை வென்ற திறமை:
பெரும்பாலும் நாட்டுக்காக விளையாட இளம் வயதிலேயே உள்ளூர் போட்டிகளில் விளையாடத் துவங்கும் வீரர்களுக்கு மத்தியில் 27 வயதில் தான் இவர் முதல் முறையாக கடந்த 2010-ம் ஆண்டில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். 2018 வரை அந்த அணிக்காக விளையாடிய அவர் அதன்பின் லன்கேஷைர் அணிக்காக தற்போது வரை விளையாடி வருகிறார். இருப்பினும் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான் போன்ற முதன்மை பந்துவீச்சாளர்கள் இருந்ததால் பெஞ்சில் அவரும் வாய்ப்பை கூட பெறாத இவர் 2021இல் காயமடைந்தார்.

Gleeson

ஏற்கனவே 33 வயதை கடந்து விட்டோம் வாய்ப்பும் கிடைக்கவில்லை காயமும் பெரிய அளவில் ஏற்பட்டதால் கடந்த வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைத்த அவர் கடைசி முயற்சியாக அதிலிருந்து குணமடைந்து 2022 டி20 ப்ளாஸ்ட் தொடரில் முழு மூச்சை கொடுத்து அற்புதமாக பந்துவீசி 23 விக்கெட்களை 16.34 என்ற நல்ல சராசரியில் எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க : IND vs ENG : முரட்டுத்தன ஜோஸ் பட்லரை ஓடவிடும் நம்ம புவி, டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு வரலாற்று சாதனை

மொத்தமாக 67 டி20 போட்டிகளில் 76 விக்கெட்டுகளை எடுத்துள்ள இவர் பிக்பேஷ், பிபிஎல் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களிலும் விளையாடி நல்ல அனுபவத்தைப் பெற்ற காரணத்தால் ஒரு வழியாக தற்போது இங்கிலாந்து தேர்வுக்குழு அவருக்கு வாய்ப்பளித்துள்ளது. அதில் முதல் போட்டியிலேயே அசத்தியுள்ள அவர் காயத்தையும் வென்று 34 வயதிலும் மனம் தளராமல் போராடுவது உண்மையாகவே பாராட்டுக்குரிய அம்சமாகும். இப்படி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ள திறமையான இவருக்கு இந்திய ரசிகர்களின் சார்பாக வாழ்த்துக்கள்.

Advertisement