SRH vs KKR : கொல்கத்தா அணிக்கெதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு இவரே காரணம் – எய்டன் மார்க்ரம் பேட்டி

Markram
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது லீக் ஆட்டத்தில் எய்டன் மார்க்கம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக சன் ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணியை அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினையும் பெற்றுள்ளது.

KKR vs SRH

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரர் ஹாரி ப்ரூக் 100 ரன்களையும், கேப்டன் மார்க்ரம் 50 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே குவித்ததால் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் : இந்த வெற்றி உண்மையிலேயே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் ஹோம் கிரவுண்டில் இல்லாமல் வெளியில் சென்று நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம்.

Brook

இந்த போட்டி இறுதி வரை கடுமையான போட்டியாகவே இருந்தது. ஏனெனில் கொல்கத்தா இருக்கும் பேட்ஸ்மேன்கள் அனைவரும் எவ்வளவு அதிரடியான ஆட்டக்காரர்கள் என்பது நாம் அறிந்ததே. அவர்களுக்கு எதிராக எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பானது இல்லை என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அவர்களை வீழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் துவக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடியதாலே போட்டியில் எளிதாக அதிக அளவில் ரன்களை குவிக்க முடிந்தது. இந்த போட்டியில் பெரிய பார்ட்னர்ஷிப் எங்களுக்கு கிடைத்ததால் இறுதிவரை நல்ல ரன் ரேட்டை தொடர முடிந்தது. ஹாரி ப்ரூக் திறமை பற்றி நாம் அறிந்ததே. அவரைப் போன்ற ஒரு வீரர் சிறப்பாக ஆடும்போது அவருக்கே அதிக பந்துகளை பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதனால் நான் அவருடன் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தேன்.

இதையும் படிங்க : சர்வதேச வீரர்களிடம் தேசப்பற்று, அர்ப்பணிப்பை கெடுப்பதே இந்தியா தான் – அப்துல் ரசாக் அதிரடி விமர்சனம், நடந்தது என்ன

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் அசத்தலாக செயல்பட்டார். அவர் இருப்பது எங்கள் அணியின் ஒரு பலம். மொத்தமாக இந்த அணி மிகச் சிறப்பாக உள்ளது. இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் இந்த வெற்றியை தொடர்வோம் என மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement