நானே பாத்தேன்.. இந்தியாவுக்கு சாதகமா இருந்து.. எங்கள ஏமாத்திடுச்சு.. தோல்விக்கு பின் தெ.ஆ கேப்டன் ஏமாற்ற பேட்டி

Aiden Markram
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 201/7 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதமடித்து 100 (56) ரன்களும் ஜெய்ஸ்வால் 60 (41) ரன்களும் எடுக்க தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 202 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 13.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இந்தியாவுக்கு சாதகம்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவுக்கு இப்போட்டியில் வென்று பதிலடி கொடுத்துள்ள இந்தியா 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

இந்நிலையில் இந்தியா பேட்டிங் செய்யும் போது எப்படி போட்டாலும் அடிக்கும் அளவுக்கு இப்போட்டியின் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ஆனால் 2வது இன்னிங்ஸில் பிட்ச் திடீரென பேட்டிங்க்கு சவாலாக மாறி தங்களுக்கு ஆச்சரியத்தையும் தோல்வியையும் கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் நான் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் ஃபீல்டிங் செய்யும் போது பிட்ச் இருந்த விதத்திற்கு நாங்கள் 200 ரன்களை சேசிங் செய்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும் போது அதில் பந்து சற்று நின்று கீழே வந்ததைப் போல் இருந்தது. ஆனாலும் அதே பிட்ச் நாங்கள் ஃபீல்டிங் செய்யும் போது இந்திய அணியினரால் எங்கே வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றளவுக்கு இருந்தது”

இதையும் படிங்க: 7 பந்தில் 4 விக்கெட்.. பிறந்தநாளில் மேஜிக் செய்த குல்தீப்.. அடங்க மறுத்த இந்தியா தெ.ஆ அணியை வீழ்த்தியது எப்படி?

“இருப்பினும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இந்த போட்டியில் சில நேர்மறையான அம்சங்கள் எங்களுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காக கிடைத்தது. ஒரு சில நல்ல விஷயங்களும் நடந்தது. நாங்கள் வேலை செய்ய வேண்டிய சில குறைகளும் இருந்தது” என்று கூறினார்.

Advertisement