ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார்கள். தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா தடுமாற்றமாக விளையாடி 138 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 45, கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆனால் அடுத்ததாக 74 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை 207 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா சுருட்டியது.
டக் அவுட்டாகி சதம்:
அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58*, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 282 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் அற்புதமான சதத்தை அடித்து 136, கேப்டன் பவுமா 66 ரன்கள் எடுத்தனர். அதனால் 27 வருடங்கள் கழித்து ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்தது.
இந்த வெற்றிக்கு முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி 2வது இன்னிங்ஸில் சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய மார்க்கம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த சதத்திற்கு உழைப்புடன் சேர்ந்த அதிர்ஷ்டமே காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதல் இன்னிங்சில் என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த பின் எப்படி விஷயங்கள் சென்றது என்பதைப் பார்ப்பது வித்தியாசமானதாக இருக்கிறது”
ஆட்டநாயகன் மார்க்ரம்:
“அதற்கு உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. அது வேலை செய்தது. லார்ட்ஸ் மைதானம் ஒவ்வொரு வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பும் இடமாகும். அங்கே நிறைய தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னே வென்றது சிறப்பான நாள். இந்தப் போட்டி ஒரு தலைப்பட்சமாக இருக்கவில்லை”
இதையும் படிங்க:தகுதியான தெ.ஆ’விடம்.. ஆஸி சாம்பியன் பட்டத்தை இழக்க இதான் 2 காரணம்.. கேப்டன் கமின்ஸ் பேட்டி
“நீங்கள் அழுத்தத்தை உள்வாங்கி உங்களுடைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். நேதன் லையனுடன் எதிரான போட்டி சிறப்பானது. வெற்றிக்கோட்டை தாண்டிச் செல்வது கடினமாக இருந்தது. எங்களுடைய கேப்டன் பவுமாவுக்கு நிறைய பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும். அவர் எங்களை முன்னிருந்து வழி நடத்தினார். அவர் முக்கியமான ரன்களை அடிப்பதற்கான வழியைக் கண்டறிந்தார். அவர் விளையாடியதைப் போன்ற ஆட்டத்தை தான் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்” என்று கூறினார்.



