ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. ஜூன் 11ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை 138 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 45, கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா முடிந்தளவு போராடியும் 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தகுதியான தென்னாப்பிரிக்கா:
அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 52, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 282 ரன்கள் துரத்திய தென்னாப்பிரிக்காவை அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 136, கேப்டன் பவுமா 66 ரன்கள் எடுத்தனர். அதனால் 27 வருடங்களுக்குப் பின் ஐசிசி கோப்பையை வென்ற தென்னாபிரிக்கா டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்தது.
மறுபுறம் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தும் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை நழுவ விட்டது. இந்நிலையில் 2வது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்யாததும் பந்து வீச்சில் விக்கெட் எடுக்க முடியாததும் தோல்விக்கு வித்திட்டதாக ஆஸ்திரேலிய கேப்டன் கமின்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஆஸ்திரேலியா தோல்வி:
“விஷயங்கள் வேகமாக மாறின. ஆனால் அது பாலமாகவும் இருந்தன. சில விஷயங்களை நாங்கள் நன்றாக செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றும் எதிரணிக்கு எதிராக நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்கா எங்களுக்கு 4வது இன்னிங்ஸில் வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை எங்களுடைய பேட்டிங்கில் டாப் 7 இடங்களில் பிரச்சனை இருக்கிறது. அவர்கள் கடந்த 2 வருடங்களாக நன்றாக செயல்பட்டுள்ளார்கள்”
இதையும் படிங்க: 27 வருட இதய வலியை தெ.ஆ மாத்த இதான் காரணம்.. அவர் ஹால் ஆஃப் ஃபேமா வருவாரு.. பவுமா பெருமிதம்
“பவுலர்கள் முதல் 2 நாட்களில் நன்றாக செயல்பட்டார்கள். எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம். குறிப்பாக நேதன் லயன் சிறப்பாக பௌலிங் செய்த போதிலும் விக்கெட் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்கா இங்கே ஏன் இருக்கிறார்கள் என்பதைக் காண்பித்தார்கள். போட்டி முழுவதும் அசத்திய அவர்கள் வெற்றிக்குத் தகுதியானவர்கள். டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் உச்சம். அதை விரும்புகிறேன். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பெரிய சாதனை. வெற்றியின் பக்கம் இல்லாவிட்டாலும் இந்த வாரம் சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.



