- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எல்லா நாளும் அசத்த முடியாது.. ஃபைனலிலும் அவரை சாய்க்க பிளான் ரெடியா வெச்சுருக்கோம்.. மார்க்ரம் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறுகிறது. அதில் இத்தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த 2 அணிகளிலுமே விராட் கோலி, சூரியகுமார் பாண்டியா, பும்ரா, ஹென்றிச் கிளாசின், மில்லர், ரபாடா என உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளனர்.

அதனால் இப்போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதில் இந்திய அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். அதே போல ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

- Advertisement -

தென்னாப்பிரிக்காவின் திட்டம்:
ஆனால் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலி போன்ற தரமான வீரர்களால் கூட அனைத்து நேரங்களிலும் அசத்த முடியாது என்று தென்னாப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். அதே சமயம் இதுவரை அசத்தாத விராட் கோலியை ஃபைனலிலும் சமாளித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைப்பதற்கான திட்டத்தை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “ஃபைனல் என்று வரும் போது அவர் எவ்வளவு தரமான வீரர் என்பதை அனைவரும் அறிவோம். அப்படியானால் அவர் இதுவரை ரன்கள் எடுக்காதது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? ஆனால் அது என்னை கவலையடையச் செய்வதாக நான் நினைக்கவில்லை. அவர் கிரேட் பிளேயர் என்பதை நாம் அறிவோம்”

- Advertisement -

“ஆனால் இந்திய அணி தங்களுடைய பேட்டிங் வரிசையில் முழுவதும் கிரேட் பிளேயர்களை கொண்டுள்ளது. இந்த விளையாட்டில் எப்போதும் மேடு பள்ளங்கள் இருக்கும். இங்கே உங்களால் எல்லா நேரங்களிலும் அசத்த முடியாது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அனைத்து நாட்களிலும் நன்றாக அடிக்க முடியாது. எனவே நாங்கள் எங்களுடைய திட்டத்தை உருவாக்கியுள்ளோம்”

இதையும் படிங்க: டக் அவுட் கூட ஆகுங்க.. ஆனா இதை மட்டும் பண்ணிடாதீங்க.. ஷிவம் துபேவிடம் இருக்கும் பிரச்சனை – விவரம் இதோ

“அதற்கு தயாராகியுள்ள நாங்கள் அதை அந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக போட்டியில் செயல்படுத்துவோம். எனவே போட்டி நாளன்று அதை நாங்கள் சரியாக செய்வோம் என்று நம்புகிறேன்” என கூறினார். இதைத் தொடர்ந்து ஃபைனல் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அதில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போட்டியின் முடிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -