INDvsWI: அஹமதாபாத் மைதானத்தில் நம்ம ராசி என்ன தெரியுமா? வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச் ரிப்போர்ட்

Ground
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுவதும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உலகசாதனை படைத்துள்ள “நரேந்திர மோடி” கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

INDvsWI

- Advertisement -

இந்த ஒருநாள் தொடரை பார்க்க மைதானத்துக்கு சென்று நேரடியாக காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதியின்றி மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த மைதானத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அஹமதாபாத்தில் அசத்துமா இந்தியா:
இந்த தொடரில் காயத்திலிருந்து குணமடைந்தது அணிக்கு திரும்பியுள்ள ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளார். இவர்களுடன் ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்களும் ஷிகர் தவான் போன்ற அனுபவ வீரர்களும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.

Pollard

அதேபோல கிரண் பொல்லார்ட் தலைமையில் அதிரடி மன்னர்கள் நிறைந்த வெஸ்ட்இண்டீஸ் அணியும் இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணில் சவால் அளிக்கக் கூடிய பல தரமான வீரர்களை கொண்டுள்ள அணியாக திகழ்கிறது. எனவே அஹமதாபாத் மைதானத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை தோற்கடித்து இந்தியா தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மைதான புள்ளிவிவரம்:
சரி இந்த தொடரை முன்னிட்டு இந்த ஒருநாள் தொடர் நடைபெறும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் பற்றி பார்ப்போம். புத்தம் புது பொலிவுடன் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக்கப்பட்டுள்ள வண்ணமிகு அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 1,32,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.

Dravid

1. கடந்த 1984 முதல் இந்த மைதானத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்றில் இதுவரை 24 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 12 போட்டிகளில் வென்றுள்ளன. சேசிங் செய்த அணிகள் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன, 1 போட்டி ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் இதற்கு முன் இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகள் 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 4 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறும் 1 போட்டியில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது என்பதால் இந்த மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லை என்றே கூறலாம்.

rahul-dravid

அதிக ரன்கள், சதங்கள்:
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் விளாசிய வீரராக ஜாம்பவான் ராகுல் டிராவிட் முதலிடத்தில் உள்ளார். இவர் 5 போட்டிகளில் 342 ரன்களை 114.00 என்ற சராசரியில் விளாசியுள்ளார். அதில் 2 சதங்களும் அடங்கும்.

- Advertisement -

அதேபோல் வெஸ்ட்இண்டீஸ் சார்பில் இம்மைதானத்தில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் விளாசிய வீரராக கிறிஸ் கெய்ல் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இங்கு 4 போட்டிகளில் பங்கேற்று 316 ரன்களை 79.00 என்ற சராசரியில் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும்.

ind

அதிகபட்ச ஸ்கோர்:
இந்த மைதானத்தில் இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோராக கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 325/5 ரன்களை பதிவு செய்துள்ளது.

அதிக விக்கெட்கள்:
இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளராக இந்தியாவின் ஜாம்பவான் கபில்தேவ் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

kapildev

பிட்ச் ரிப்போர்ட்:
அஹமதாபாத் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த மைதானம் புதியதாக கட்டப்பட்டதற்கு பின்பு சுழல் பந்துவீச்சாளர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

அத்துடன் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 241 ஆகும். சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 212 ஆகும். இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுவதால் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement