ரோஹித்தின் வருகையால் சிக்கலில் உள்ள 2 வீரர்கள். இவங்க 2 பேருக்கு தான் ஆப்பு – விவரம் இதோ

Rohith 2
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. இந்த தொடரின் சில போட்டிகளில் ரோகித் சர்மா தனது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பொல்லார்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் பிளேஆப் சுற்றின் போதும் இறுதிப் போட்டியின் போதும் சரியான நேரத்தில் மீண்டும் அணிக்குள் இணைந்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார்.

Rohith

- Advertisement -

இந்நிலையில் அந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வு நடைபெற்றது. அப்போது ரோகித் சர்மாவின் காயத்தை கணக்கில் கொண்டு அவரை ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இந்திய நிர்வாகம் சேர்க்கவில்லை. மேலும் இவ்விரண்டு தொடர்களிலும் கிடைக்கும் நாட்களை அவர் ஓய்வு மற்றும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவரால் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என்று நினைத்தது. ஆனால் துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் ரோஹித்துக்கு இடம் கிடைக்கவில்லை.

பின்னர் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் ஆதரவு குறித்து கருத்துக்களை கூறியதால் உடனே ரோகித் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் ஆஸ்திரேலியா செல்லாமல் நேராக இந்தியா திரும்பி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டார். பின்னர் அவர்கள் கொடுத்த சான்றிதழின் பேரில் அவர் டெஸ்ட் தொடரில் இணைவார் என்று கூறப்பட்டது. இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை.

rohith 1

அதற்கு காரணம் யாதெனில் டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் கிளம்ப நேரம் ஆனதும், மேலும் ஆஸ்திரேலியா வந்து 14 நாட்கள் குவாரன்டைன் இருக்க வேண்டும் என்ற விதிகளால் அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதனால் 3வது போட்டியில் இருந்து அவர் விளையாடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ரஹானேவும் இந்திய அணியில் ரோஹித் இணைய ஆவலாக இருப்பதாக ஒரு தகவலை தெரிவித்தார். இதனால் அடுத்த போட்டியில் ரோஹித் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்து போட்டியில் யாருக்கு பதிலாக ரோஹித் அணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலாக இந்திய அணியில் அவர் விளையாட இரண்டே வாய்ப்பு உள்ளது. ஒன்று கடந்து இரண்டு போட்டிகள் துவக்க ஆட்டக்காரராக சொதப்பும் அகர்வாலுக்கு பதிலாக அவர் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். அப்படி இல்லை எனில் விஹாரி அணியிலிருந்து நீக்கப்பட்டு விஹாரியின் இடத்தில் கில் விளையாடினால் அகர்வால் மற்றும் ரோஹித் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ரோகித் மட்டும் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக இந்திய அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரோஹித்தின் வருகையால் அகர்வால் மற்றும் விஹாரியின் இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement