ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரஹானே இதனை செய்யலனாதான் ஆச்சரியப்படுவேன் – அகார்கர் வெளிப்படை

Agarkar
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

indvsaus

- Advertisement -

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவின் இந்த தோல்வி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.இதைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இருவரும் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என்ற நிலையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. விராட் கோலி நாடு திரும்பியுள்ளதால் கேப்டன் பொறுப்பை அஜின்கியா ரகானே ஏற்றுள்ளார்.

rahane

இதனால் அஜின்கியா ரகானேவிற்கு தேவையான ஆலோசனைகளை முன்னாள் வீரர்கள் பலர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கூறுகையில் “ ரகானே ஒரு சிறந்த வீரர். இவருக்கு வெளிநாடுகளில் விளையாடிய அனுபவம் அதிகமாகவே இருக்கிறது. இவர் பல போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். தற்போது இந்திய அணியில் விராட் கோலி இல்லாத நிலையில், கேப்டனாக செயல்பட உள்ள ரகானே 4வது இடத்தில் களம் இறங்க வேண்டும்.

Rahane 1

அவர் 4வது இடத்தில் அவர் களமிறங்க வில்லை என்றால் தான் நான் ஆச்சரியம் கொள்வேன்” என்று முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். அவர் கூறியபடி ரஹானே 4 ஆம் இடத்திலும், ரஹானேவின் 5 ஆம் இடத்தில் விஹாரா இறங்குவார் என்று தெரிகிறது.

Advertisement