19வது ஓவரில் 3 Wide வீசிய சிராஜ்க்கு அட்வைஸ் கூடுத்த தோணி…என்ன பேசினார் தெரியுமா ?

- Advertisement -

பெங்களூரில் நேற்று நடந்த ஐபில் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொண்ட சென்னை அணி தோனி மற்றும் அம்பதி ராயுடுவின் ஆட்டத்தால் வெற்றிபெற்றது. ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்குமே வெற்றியின் வாய்ப்பிருந்த நிலையில் 19 ஒவேரில் 3 அகல பந்துகளை போட்ட பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர் சிராஜ் போட்டியின் போக்கை மாற்றினார். அவரின் பந்தை எதிர் கொண்ட தோனி அவர் பதட்டமாக இருப்பதை உணர்ந்த போட்டி முடிந்ததும் அவரை அழைத்து அவரை ஊக்கப்படுத்தியதுடன் சில பல டிப்ஸ்களையும் அளித்துள்ளார். kohli

இதையடுத்து போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேப்டன் தோனி பேச்சும் இளம் வீரர்களுக்கு நல்ல ஊக்கமாக அமைந்திருந்தது இதுகுறித்து பேசி தோணி ” டிவில்லியர்ஸ் ஆட்டத்தினால் பெங்களூரு அணியின் ஸ்கோர் 200- ஐ தாண்டியதை பார்த்தபோதும் நாங்கள் வெற்றி பெறுவது கடினம் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஒட்டு மொத்தமாக, நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை என்றாலும் போட்டி வெற்றியில் முடிந்தது மகிழ்ச்சி” தான் என்று தெரிவித்தார்

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய தோனி “ஆட்டத்தை முடிப்பவர்கள் இளம் வீரர்களுக்கு உதவ வேண்டும். தங்கள் அனுபவங்களை அவர்களுடன் பகிரிந்துகொள்ள வேண்டும். இதெல்லாம் முக்கியம், ஏனென்றால் நாளை நான் விளையாடாமல் கூட போகலாம். இந்த அனுபவத்தை வைத்து அவர்கள் விளையாட வேண்டும் இந்தப் போட்டியிலும் ராயுடு சிறப்பாக விளையாடினார். அவர்தான் ஸ்கோர்போர்டில் ரன்கள் உயர்ந்துகொண்டே இருக்க காரணமாக இருந்தார்” என்று தெரிவித்திருந்தார்.

rayudu

எப்போதும் தோணி தலைமையில் அணி வெற்றிபெற்றால் கூட அந்த வெற்றியை தனது அணியின் நபர்களுக்கேய சமர்ப்பனம் செய்துவிடுகிறார் தோணி. மேலும் தன்னுடன் மைதானத்தில் ஆடும் சக வீரர்கள் எதிரியாக இருந்தாலும் அவர்களின் நலனுக்காக எப்போதும் பல அட்வைஸ்களை வழங்கிவரும் தோனியின் நல்ல குணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

Advertisement