இப்படியெல்லாம் சொல்லி சண்டையை வளக்காதீங்க ப்ளீஸ் – முகமது ஷமிக்கு ஷாஹித் அப்ரிடி அட்வைஸ்

Afridi-and-Shami-and-Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியானது சாம்பியன் பட்டத்தை வென்றது. பாகிஸ்தான் அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில் இந்த தோல்விக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர் தனது டிவிட்டர் பக்கத்தில் உடைந்த இதயம் போன்ற ஒரு ஸ்மைலியை பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதற்கு ரீ ட்வீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி : “மன்னிக்கவும் சகோதரா”, “இதற்குப் பெயர் தான் கர்மா” என்று பதில் அளித்து இருந்தார். அவரது இந்த ரீட்வீட் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ரசிகர்கள் மத்தியில் சற்று காரசாரமான விவாதத்தையும் வெளிக்கொணர்ந்தது.

- Advertisement -

இந்திய அணியை குறைத்து பேசியதாலயே அக்தருக்கு பதில் அளிக்குமாக விதமாக முகமது ஷமி இந்த டிவீட்டினை செய்திருந்தார். ஆனாலும் அவரது இந்த ரீ டிவீட் தற்போது பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முகமது ஷமியின் இந்த ரீ டிவீட் குறித்து பேசியுள்ள ஷாகித் அப்ரிடி கூறுகையில் : நாம் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டில் நாம் ரசிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான தூதர்களாகவும் இருக்க வேண்டும். இரு நாட்டில் உள்ள ரசிகர்களையும் இணைக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் அதை விடுத்து இது போன்ற ட்வீட்களால் ரசிகர்கள் மத்தியில் சண்டையையும், வெறுப்பையும் நாம் வளர்க்க வேண்டாம். இது போன்ற செயலை நாம் செய்யக்கூடாது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உறவு மேம்பட வேண்டும் என்றால் கிரிக்கெட் வீரர்களும் தங்களது அன்பை பகிர வேண்டுமே தவிர வெறுப்பை பகிரக்கூடாது என முகமது ஷமிக்கு அப்ரிடி அட்வைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் ல விட எங்க நாட்டுக்காக ஆடறது தான் முக்கியம் – கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய வீரர்

பொதுவாகவே இந்திய அணி குறித்து தாறுமாறாக விமர்சனங்களை முன்வைத்து வரும் சோயிப் அக்தர் இதேபோன்று விமர்சனங்களில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. அதேபோன்று ஷமியும் இதுபோன்ற செயல்களை தவிர்த்திருக்கலாம் என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement