ஐ.பி.எல் ல விட எங்க நாட்டுக்காக ஆடறது தான் முக்கியம் – கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய வீரர்

KKR
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பங்கேற்ற குஜராத் அணியானது அறிமுகத் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான வேலைகள் தற்போதே மும்முரமாக துவங்கி நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ள 16-வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக தற்போது நவம்பர் 15-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அனைத்து அணிகளும் தற்போது அவர்களது அணியில் இருந்து வீரர்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும் தங்களுக்கு தேவையான வீரர்களை மற்ற அணிகளிடமிருந்து டிரேடிங் மூலம் வாங்கி வருகின்றனர். அதே வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் இல்லாத சில கிரிக்கெட் வீரர்களும் தங்களது சொந்த காரணங்களை முன்வைத்து இந்த தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாம் பில்லிங்ஸ் இந்த ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என்று அறிவித்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது : இந்த முடிவினை எடுப்பதற்கு சற்று கடினமாக தான் இருக்கிறது.

- Advertisement -

ஆனாலும் நான் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் நான் தற்போது இங்கிலாந்தில் துவங்க இருக்கும் சம்மர் கிரிக்கெட்டில் விளையாட விருப்பப்படுகிறேன். அதோடு எங்களது நாட்டு அணிக்காக நான் விளையாட விரும்புவதால் இந்த தொடரை நான் பயன்படுத்தி இங்கிலாந்து அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : 10.75 கோடி இவருக்கு அதிகம் தான் கழட்டி விட்ட டெல்லி அணி – ஷர்துல் தாகூரை புதுசா வாங்கிய அணி எது தெரியுமா?

கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த இவர் ஒரு சில போட்டியிலேயே விளையாடியிருந்ததாலும் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் இங்கிலாந்து கவுண்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement