இவர் இருக்கும்வரை இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கவே நடக்காது. நேரடியாக தலைவரை தாக்கி பேசிய அப்ரிடி – விவரம் இதோ

Afridi-1
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதம் அதிகரித்ததன் காரணமாக பல்வேறு நாட்டு அணிகளும் அங்கு விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் இந்திய அணியும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அப்ரிடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

pakisthan

- Advertisement -

மீண்டும் எப்போது இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கும் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் காத்திருந்துதான் ஆகவேண்டும். அவர் இருக்கும் வரை இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடக்காது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான உறவு மிக மோசமாக இருந்து வருகிறது.

ஐஐசிசி தொடரை தவிர்த்து இந்த இரண்டு அணிகளும் மற்ற போட்டிகளில் விளையாட வாய்ப்பு என்பதே கிடைக்கவில்லை. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காது என்பதை நான் உறுதியாக தெரிவிக்கிறேன். மோடி சிந்திப்பதை விட இந்தியர்கள் நேர்மறையாக சிந்திக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே.

trump

எதிர்மறையாக சிந்திக்கும் அவரது சிந்தனையை நான் பார்க்கிறேன் ஒரே ஒரு நபர் ஆல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு உறவு சிதைக்கப்பட்டுள்ளது இது நாம் எதிர்பார்ப்பது என்று எனவே மோடி என்ன விரும்புகிறார் அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அப்படி கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement