இந்திய அணியின் கனவில் மண்ணை வாரிப்போட்ட ஆப்கானிஸ்தான் அணி – அதிசயம் ஏதாவது நிகழுமா ?

afg-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. கிட்டத்தட்ட இன்றைய போட்டிகள் முடிவடைந்த பின்னர் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது ? தெரியவரும். ஏற்கனவே குரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் குரூப் 2-ல் ஏற்கனவே பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்தில் எந்த அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பது இன்றைய போட்டிக்கு பிறகு தெரிய வரும்.

afgvsnz

- Advertisement -

ஏனெனில் தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒருவேளை நியூசிலாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணி நேரடியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.

முக்கியமான இந்த போட்டியில் இன்று விளையாடி வரும் நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. அபுதாபி மைதானத்தில் இன்று பகல் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அதிர்ச்சியளித்தார்.

fans

அதுமட்டுமின்றி துவக்கத்திலிருந்தே விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே ஆப்கானிஸ்தான் அடித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக நஜிபுல்லா 73 ரன்களை குவித்தார். மற்றபடி வேறு யாரும் பெரியளவு ரன்களை அடிக்கவில்லை. இந்த போட்டியில் எப்படியாவது ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பலரும் பிராத்தனை செய்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : காயமடைந்த பிறகு அழுதபடி வெளியேறிய இங்கிலாந்து வீரர் – பைனலுக்கு போற நேரத்துல இப்படியா ?

இந்நிலையில் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி தற்போது அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் எப்படியாவது ஆப்கானிஸ்தான் ஜெயித்து விடும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்த அனைத்து ரசிகர்களின் எண்ணத்திலும் தற்போது ஆப்கானிஸ்தான் அணி மண்ணை தூவி உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் 125 ரன்கள் எல்லாம் நியூசிலாந்து அணி எளிதில் அடித்து அரையிறுதிக்கு முன்னேறும் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement