காயமடைந்த பிறகு அழுதபடி வெளியேறிய இங்கிலாந்து வீரர் – பைனலுக்கு போற நேரத்துல இப்படியா ?

Roy
- Advertisement -

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே அடித்ததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் தென் ஆப்பிரிக்க அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

- Advertisement -

அதன்படி ஐந்தாவது ஓவரின் முதல் பந்தை சந்தித்த ஜாஸ் பட்லர் சிங்கிள் எடுத்து மறுபக்கம் ஓட ஜேசன் ராய் ஓடி வரும் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தில் பாதியிலேயே வலியை உணர்ந்து ஒரு காலை மட்டும் உபயோகித்து நொண்டி அடித்தபடி ரன்னை ஓடி நிறைவு செய்தார். பின்பு அப்படியே மைதானத்தில் படுத்து வலியால் துடித்த அவருக்கு பிசியோ வந்து முதல் உதவி செய்த பின்னரும் அவரால் அந்த காயத்தின் வலியிலிருந்து விடுபட முடியவில்லை.

இதன் காரணமாக சக வீரரின் உதவியுடன் வெளியேறிய ஜேசன் ராய் போட்டி முடியும் வரை தொடர்ந்து வலியை உணர்ந்தார். அதுமட்டுமின்றி ஆட்டம் முடிந்ததும் காலில் கட்டு போடப்பட்டு ஸ்டிக் ஒன்றை ஏந்திய வாறு அவர் நடந்து வந்தார். அரையிறுதிக்கு முன்னேறிய வேளையில் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய்க்கு இப்படி ஒரு நிலைமை இருப்பது இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்த பிறகே அவரது காயம் எந்த அளவில் உள்ளது ? எத்தனை நாட்களில் சரியாகும் ? என்கிற தெளிவான விவரம் கிடைக்கும் என்று இங்கிலாந்து நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement