- Advertisement -
உலக கிரிக்கெட்

177 ரன்ஸ்.. பிறந்தநாளில் ரஷித் கான் உலக சாதனை.. தெ.ஆ அணியை பந்தாடி வரலாறு காணாத வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகளில் ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஷார்ஜாவில் நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை முதல் முறையாக தோற்கடித்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. அந்த நிலையில் அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி செப்டம்பர் 20ஆம் தேதி சார்ஜாவில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை பந்தாடி 311-4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் சதமடித்து 105 ரன்கள் குவித்தார். அவருடன் ரஹமத் ஷா 50, அசமதுல்லா ஓமர்சாய் 86* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சாதனை வெற்றி:

அதைத் தொடர்ந்து 312 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் தெம்பா பவுமா 38 ரன்களில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் டானி டீ ஜோர்சியை 31 ரன்களில் ரஷித் கான் அவுட்டாக்கினார். அடுத்ததாக வந்த ஐடன் மார்க்ரம் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ரிசா ஹென்றிக்ஸ் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதே போல எதிர்ப்புறம் வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 5, கெய்ல் வேரின் 2, வியன் முல்தார் 2 ரன்களில் ரசித் கான் சுழலில் சிக்கினார். அதோடு நிற்காத ரசித் கான் மறுபுறம் போராடிய ஐடன் மார்க்ரமையும் 21 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் 34.2 ஓவரிலேயே தென் ஆப்பிரிக்காவை 134 ரன்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான் 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

ரசித் கான் மேஜிக்:

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2018ஆம் ஆண்டு இதே சார்ஜாவில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 154 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே ஆப்கானிஸ்தானின் முந்தைய பெரிய வெற்றியாகும். மேலும் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

அதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு தொடரை வென்று ஆப்கானிஸ்தான் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த சரித்திர வெற்றிக்கு கேப்டன் ரசித் கான் தம்முடைய 26வது பிறந்தநாளில் 19 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிங்க: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை சமன்செய்து அசத்திய – ரஹ்மானுல்லா குர்பாஸ்

அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலராக உலக சாதனை படைத்துள்ள ரசித் கான் சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் வெர்னோன் பிளாண்டர் 4/12 விக்கெட்டுகள் எடுத்ததை முந்தைய சாதனையாகும்.

- Advertisement -