ஒவ்வொரு போட்டிக்கும் முன்னரும் தேம்பி தேம்பி அழும் ஆப்கான் வீரர் – அழக்கூடாது என தாலிபான்கள் கட்டளை

nabi
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் வீரர்கள் டாஸின் போது தொடர்ச்சியாக அழுதபடி இருக்கின்றனர். இவர்களது இந்தச் செயல் ரசிகர்களை பெரும் வருத்தமடைய செய்துள்ளது. மேலும் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் கூட்டத்தை இருக்கும் ரசிகர்களும் கதறி கதறி அழுகின்ற சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இப்படி ஒவ்வொரு போட்டியின் போதும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அழுவதற்கு காரணம் என்னவென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

afg 2

அதன்படி சமீபத்தில் ஆப்கான் நாட்டை தங்கள் வசப்படுத்திய தலிபான்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பழைய தேசிய கீதத்தை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் ஆப்கன் நாட்டிற்கான புதிய தேசிய கீதத்தையும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி தேசியக் கொடியையும் மாற்றி வெள்ளை நிறத்தில் தாலிபான்கள் கொடியை அவர்கள் தேசியக் கொடியாக அறிவித்து உள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக பழைய தேசிய கீதத்தை கேட்க முடியாதா ? பழைய தேசியக் கொடியை ஏந்த முடியாதா ? என்கிற நினைப்பில் ஏங்கி தவித்து வரும் வீரர்கள் தற்போது ஐசிசி நடத்தும் இந்து t20 உலகக் கோப்பை போட்டியின் போது பழைய தேசிய கீதம் ஒலிப்பதனால் உணர்ச்சிப் பெருக்கில் அழுது வருகின்றனர். தாலிபான்கள் ஏற்கனவே ஐ.சி.சி-யிடம் புதிய தேசிய கீதத்தை ஒலிக்கும்படி கூறியும் ஐசிசி அதனை மறுத்து பழைய தேசிய கீதத்தை தான் ஒலிக்கச் செய்வோம் என்று கூறியதால் தற்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களது தேசிய கீதத்தை கேட்கும்போதெல்லாம் மைதானத்தில் கண்கள் கலங்கியபடி நிற்கின்றனர்.

afg 1

ஆனால் இதற்கும் தற்போது தடை விதித்து எச்சரித்துள்ள தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் போட்டியின் போது தேசிய கீதம் ஒலிக்கையில் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்படி தேசிய கீதம் ஒலிக்கும் போது யாராவது கண்கள் கலங்கிய படி இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் போட்டிக்கு முன்னர் தங்களது தேசிய கீதம் ஒலிக்க படுவதை கேட்கும்போது தங்களையும் மறந்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 19 ஆவது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிக்கு அழைத்து சென்ற பாகிஸ்தான் வீரர் – யாருப்பா இவரு?

மேலும் போட்டியை கண்டுகளிக்க வரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அது தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களும் கண்ணீர் விட்டபடி இருக்கின்றனர். இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் வீரர்களின் இந்த பரிதாப நிலையைக் கண்டு ரசிகர்கள் கண்ணீர் வடிக்க தான் செய்கின்றனர்.

Advertisement