19 ஆவது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிக்கு அழைத்து சென்ற பாகிஸ்தான் வீரர் – யாருப்பா இவரு?

Asif

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக குல்புதீன் நயிப் மற்றும் முகமது நபி ஆகிய இருவரும் 35 ரன்கள் குவித்தனர்.

afg vs pak

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது துவக்கத்திலேயே ரிஸ்வான் விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் பாபர் அசாம், பக்கர் சமான் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் பாகிஸ்தான் அணி எளிதாக இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் போட்டியின் இறுதிக்கட்டத்தில் பக்கர் சமான், முகமது ஹபீஸ், பாபர் அசாம், மாலிக் என முக்கியமான விக்கெட்டுகளை இழக்க 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. எனவே வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது. இதன் காரணமாக நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

asif 1

இந்நிலையில் 19-வது ஓவரை கரீம் ஜனத் வீச அந்த ஒரே ஓவரில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரரான ஆசிப் அலி 4 சிக்சர்கள் விளாசி பாகிஸ்தான் அணியை 19-வது ஓவர் முடிவிலேயே 148 ரன்கள் என்கிற இலக்கினை எட்ட உதவி செய்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கடைசி 2 ஓவர்களில் 24 ரன்களை வைத்து ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை சுருட்டி விடும் என்று எதிர்பார்த்த வேளையில் 4 சிக்சர்களை அடித்து ஆசிப் அலி பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது அனைவரிடமும் பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் லாசித் மலிங்காவின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ரஷீத் கான் – குவியும் வாழ்த்து

மேலும் இந்த உலக கோப்பை தொடரின் கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு பாகிஸ்தான் அணி பலமாக உள்ளதையும் அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement