2023 உலக கோப்பையுடன் 24 வயதிலேயே திடீரென ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்.. ரசிகர்கள் ஏமாற்றம்

Naveen Ul Haq Rashid Khan
- Advertisement -

உலகம் முழுவதிலும் உள்ள டாப் 10 கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 16 வரை நடைபெறும் ஐசிசி 2023 உலக கோப்பை வெல்வதற்காக இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் சமீபத்தில் இலங்கை மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

அதை தொடர்ந்து நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அந்த அணி லீக் சுற்றில் போராடி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த நிலைமையில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அந்த அணியினர் தற்போது வலைப்பயிற்சிகளை துவக்கியுள்ளனர். அப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் ஒருநாள் போட்டிகளிலிருந்து இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக முக்கிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் அதிரடியாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

தீடீர் ஓய்வு:
இத்தனைக்கும் வெறும் 24 மட்டுமே நிரம்பிய வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இருப்பினும் நிலையான இடம் பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத அவர் 2023 ஆசிய கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக 2023 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் விளையாடியிருந்த அவர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் முதன்மை பவுலராக விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த வருடம் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் அவர் சண்டை போட்டது உலக அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

அந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 27 போட்டிகளில் 34 விக்கெட்களை எடுத்துள்ள அவருக்கு பெரும்பாலும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் விளையாடி தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள அவர் இத்தனை நாட்களாக ஆதரவு கொடுத்த ஆப்கானிஸ்தான் வாரியத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ : அதிரடி சிக்சர்கள்.. தரமான ஸ்டார்க், கமின்ஸ், ஹேசல்வுட்டை தெறிக்க விட்ட ஹிட்மேன்.. பவர்ப்ளேவில் 13 வருடத்துக்கு பின் சாதனை

இருப்பினும் அவரின் இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும் தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement