ஒரு மாசம் எந்த மேட்ச்சும் இல்ல – தள்ளிப்போன ஆப்கன் தொடர், ஃபைனலுக்கு பின் இந்தியாவின் அடுத்த தொடரின் அட்டவணை இதோ

IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதியன்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்குப் போகும் இந்த போட்டியில் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாடுகிறது. மேலும் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை புத்துணர்ச்சியுடன் களமிறங்கி வெற்றிக்கு போராடுகிறது.

- Advertisement -

குறிப்பாக 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த தன்னம்பிக்கையுடன் இந்த போட்டியில் இந்தியா களமிறங்கியுள்ளது. அந்த வகையில் இப்போட்டிக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்குவதாக இருந்தது. சொல்லப்போனால் அதே தொடருடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இணைத்து பெரிய தொடராக நடத்த திட்டமிட்டிருந்த பிசிசிஐ நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்திருந்தது.

தள்ளிப்போகும் ஆப்கன் தொடர்:
இந்நிலையில் ஒளிபரப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்து விட்டதால் இந்த ஆப்கானிஸ்தான் தொடரை பிசிசிஐ தள்ளிப் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்புவதற்காக டிஸ்னி – ஸ்டார் நிறுவனம் செய்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் முடிவுக்கு வந்தது. அதனால் தற்போது இந்தியாவில் இந்திய அணி விளையாடும் போட்டியை ஒளிபரப்புவதற்கு எந்த ஒளிபரப்பு நிறுவனத்துடனும் பிசிசிஐ பார்ட்னராக இல்லை.

indvsafg

இருப்பினும் அதற்கான ஒப்பந்த ஏலத்திற்கு நிறைய பிரபல நிறுவனங்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அது முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால் அதற்கிடையே விளையாடத் தமிடப்பட்டிருந்த இந்த ஆப்கானிஸ்தான் தொடரை பிசிசிஐ தள்ளிப்போட முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் போன்ற கத்துக்குட்டி விளையாடும் இந்த தொடரை பெரிய அளவில் யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பதால் தற்காலிகமாக பிசிசிஐயுடன் அவசரமாக ஒப்பந்தம் செய்து இத்தொடரை ஒளிபரப்ப எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

- Advertisement -

அதனால் இத்தொடரை வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பின் நீண்ட காலம் கழித்து முதல் முறையாக ஒரு மாதம் முழுவதும் இந்தியா எந்தவிதமான போட்டிகளிலும் விளையாட போவதில்லை. சொல்லப்போனால் அடுத்ததாக வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா விளையாடுவதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

IND vs WI Nicholas Pooran Rohit Sharma

அந்த வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்திய அணியினர் ஒரு மாத ஓய்வுக்கு பின் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணித்து அந்த தொடர்களில் விளையாட உள்ளனர். சமீப காலங்களில் ஒரே சமயத்தில் 2 அணிகள் களமிறங்கும் அளவுக்கு இந்தியா அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் தற்போது இந்த ஃபைனலுக்கு பின் ஒரு மாதம் எந்த போட்டியிலும் விளையாடப் போவதில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் செய்தியாக அமைகிறது.

- Advertisement -

இருப்பினும் ஃபைனலில் தோற்கும் நிலையில் இருக்கும் “இந்தியா அப்டியே ஜெயிச்சிட்டாலும்” என ரசிகர்கள் வேதனையுடன் கிண்டலடிக்கின்றனர். அந்த தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. மாறாக டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா சேனைனில் மட்டுமே இலவசமாக பார்க்கலாம். அந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் அட்டவணை இதோ:
முதல் டெஸ்ட் : இரவு 7.30 மணி, ஜூலை 12, டாமினிக்கா
2வது டெஸ்ட் : இரவு 7.30 மணி, ஜூலை 20, ட்ரினிடாட்
முதல் ஒன்டே : ஜூலை 27, இரவு 7.00 மணி, பார்படாஸ்
2வது ஒன்டே : ஜூலை 29, இரவு 7.00 மணி, பார்படாஸ்
3வது ஒன்டே : ஆகஸ்ட் 1, இரவு 7.00 மணி, ட்ரினிடாட்

IND vs WI T20I

இதையும் படிங்க:WTC Final : 13 ஆவது இந்திய வீரராக டெஸ்ட் கிரிக்கெட் மாபெரும் மைல்கல்லை எட்டிய ரஹானே – சாதனை விவரம் இதோ

முதல் டி20 : ஆகஸ்ட் 4, இரவு 7.30 மணி, ட்ரினிடாட்
2வது டி20 : ஆகஸ்ட் 6, இரவு 7.30 மணி, கயானா
3வது டி20 : ஆகஸ்ட் 8, இரவு 7.30 மணி, கயானா
4வது டி20 : ஆகஸ்ட் 12, இரவு 7.30 மணி, ப்ளோரிடா
5வது டி20 : ஆகஸ்ட் 13, இரவு 7.30 மணி, பிளோரிடா

Advertisement