இந்தியாவை போல முயற்சித்து பல்ப் வாங்கிய பாகிஸ்தான், சரித்திரத்தை மாற்றி மாபெரும் வரலாறு படைத்து ஆப்கானிஸ்தான்

AFG vs PAK
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 24ஆம் தேதியன்று துவங்கியது. பாதுகாப்பு காரணங்களால் பொதுவான இடமான ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் சார்ஜா நகரில் நடைபெறும் இத்தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு சமீபத்திய 2023 பிஸ்எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் சடாப் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. குறிப்பாக சமீப காலங்களில் ஒரே சமயத்தில் முதன்மை அணி முக்கிய தொடரிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியை கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராகவும் விளையாட வைத்து இந்தியா வெற்றி கண்டு வரும் ஸ்டைலை இத்தொடரில் பாகிஸ்தான் வாரியம் முதல் முறையாக கடைபிடித்துள்ளது.

ஆனால் பாபர் அசாம் தலைமையிலான முதன்மை அணியாலேயே கடந்த வருடம் சொந்த மண்ணில் நிறைய தொடர்களில் வெற்றி காண முடியாத பாகிஸ்தானின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. அந்த நிலைமையில் சார்ஜாவில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் ஆப்கானிஸ்தானின் அட்டகாசமான பந்து வீச்சில் முழு மூச்சுடன் போராடியும் ஆல் அவுட்டாவதை தவிர்க்க முடிந்ததே தவிர 20 ஓவர்களில் 92/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தானின் சரித்திரம்:
அந்த அணிக்கு பிஎஸ்எல் தொடரில் 36 பந்துகளில் அதிவேக சதமடித்த சாய்ம் ஆயுப் 17, முகமது ஹாரிஸ் 6, அப்துல்லா ஷபிக் 0, டயப் தாஹிர் 16, இமாத் வாசிம் 18, கேப்டன் சடாப் கான் 12 என எந்த வீரரும் 20 ரன்கள் கூட தாண்டாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்தளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி, பரூக்கி மற்றும் முஜீப் ஊர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 93 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானும் இப்ராஹிம் ஜாட்ரான் 9, குல்புதின் நைப் 0, ரஹ்மத்துல்லா குர்பான் 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து 27/3 என தடுமாறியது. இருப்பினும் அடுத்து வந்த வீரர்களில் கரீம் ஜனத் 7 ரன்களில் அவுட்டானாலும் நஜிபுல்லா ஜாட்ரான் 17* (23) ரன்களும் மறுபுறம் நிலைத்து நின்று தனது அனுபவத்தை காட்டிய நட்சத்திர வீரர் முகமது நபி 3 பவுண்டரி 1 சிக்சருடன் 38* (38) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 17.5 ஓவர்களிலேயே 98/4 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் பந்து வீச்சில் முடிந்தளவுக்கு போராடிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக இசானுல்லா 2 விக்கெட்களை எடுத்தார். அதனால் இந்தியா போல இளம் வீரர்களுடன் விளையாட முயற்சிக்கும் பாகிஸ்தானின் முயற்சி ஆரம்பத்திலேயே பல்ப் வாங்கியுள்ளது வழக்கம் போல கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானிடம் தோற்கும் அளவுக்கு மோசமாக செயல்பட்ட இளம் அணிக்கு பதிலாக பாபர் அசாம் தலைமையிலான அணியே பரவாயில்லை என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதை விட கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இதே சார்ஜா மைதானத்தில் ஆப்கானிஸ்தானை வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்திருந்தது. அந்த போட்டியில் இருநாட்டு வீரர்களும் அடிக்காத குறையாக களத்தில் மோதிக்கொண்ட நிலையில் களத்திற்கு வெளியே இருநாட்டு ரசிகர்களும் சரமாரியாக அடித்துக் கொண்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி யாராலும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

- Advertisement -

அந்த போட்டியில் கடுமையாக போராடி கையில் கிடைத்த வெற்றியை வாயில் சுவைக்க முடியாமல் கோட்டை விட்ட ஆப்கானிஸ்தான் தற்போது அதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஜஸ்பிரீத் பும்ராவின் காயம் தொடர்பான தகவலில் முக்கிய முடிவினை எடுத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

அதை விட பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியை சந்தித்த வந்த ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அந்த தோல்வி சரித்திரத்திற்கு முற்றுப்புள்ளி முதல் வெற்றியை பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement