245 ரன்ஸ்.. சச்சினின் உலக சாதனையை சமன் செய்த குர்பாஸ்.. வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

- Advertisement -

சார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அதனால் சமனில் இருந்த அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் போராடி 244-8 ரன்கள் எடுத்தார்கள். அதிகபட்சமாக அனுபவ வீரர் முகமதுல்லா சதத்தை நெருங்கிய போதிலும் கடைசி ஓவரில் 98 (98) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அவருடன் கேப்டன் மெஹந்தி ஹசன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் வெற்றி:

பின்னர் 245 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர் ரஹ்மன்னுல்லா குர்பாஸ் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். ஆனால் எதிர்புறம் அடல் 14, ரஹ்மத் ஷா 8, கேப்டன் ஷாஹிதி 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக வந்த ஓமர்சாய் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருடன் நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த குர்பாஸ் சதமடித்து 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் 101 (120) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இறுதியில் ஹோமர் சாய் 70* (77), முகமது நபி அதிரடியாக 34* (27) ரன்கள் எடுத்த உதவியுடன் 48.2 ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் 246-5 ரன்கள் குவித்தது. அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்றது. வங்கதேசத்துக்கு ரஹ்மான் மற்றும் நஹிட் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

குர்பாஸ் சாதனை:

சமீப காலங்களாகவே எழுச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ஆப்கானிஸ்தான் கடைசியாக வலுவான தென்னாபிரிக்காவையும் 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தது. இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 3 இருதரப்பு தொடர்களில் ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு சதம் அடித்து முக்கிய பங்காற்றிய குர்பாஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: அடிச்சி சொல்றேன்.. சி.எஸ்.கே டீம் தான் ஜேம்ஸ் ஆண்டர்சனை வாங்கும் – காரணத்தை கூறிய மைக்கல் வாகன்

இதையும் சேர்த்து அவர் 22 வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதிலேயே அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்/குவிண்டன் டீ காக்/ரஹ்மனுல்லா குர்பாஸ்: தலா 8
2. விராட் கோலி: 7

Advertisement